august gst collection :ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து 6-வது மாதமாக சாதனை! ஆகஸ்ட் மாத வசூல் 28% அதிகரிப்பு
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, ஆகஸ்ட் மாதத்தில் 28 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் 2022, ஆகஸ்ட் மாதத்தில் 28 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 6-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்து சென்று சாதனைபடைத்து வருகிறது. ஆனால் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிட்டால் ஆகஸ்ட் மாதத்தில் 4% குறைவாகும்.
lpg cylinder price: lpg price: மிகப்பெரிய நிம்மதி! எல்பிஜி சிலிண்டர் விலை 91 ரூபாய் குறைப்பு
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடியாக இருந்தது. அதைவிட 28 சதவீதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 43ஆயிரத்து 612 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.24 ஆயிரத்து 710 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.30 ஆயிரத்து 951 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.77 ஆயிரத்து 782 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.10 ஆயிரத்து 188 கோடி கிடைத்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.32,3654 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து ரூ.26,774கோடி மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் மத்திய அரசுக்கு ரூ.58,116 கோடியும், மாநிலங்களுக்கு ரூ.59,581 கோடியும் வசூலாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி வரி ரூ.7.46 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் வசூலான தொகையைவிட 33சதவீதம் அதிகம்.
பொருளாதாரம் படிப்படியாக கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதுதான் ஜிஎஸ்டி வரி உயர்வில் தெரிகிறது.ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் வரி உயர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
september 1: அலர்ட்! செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்: தெரிஞ்சுக்கோங்க
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.