இந்திய ராணுவத்தை கண்காணிக்க லடாக் எல்லையில் சீனா புதிய யுத்தி; புதிய படங்கள் வெளியாகி அதிர்ச்சி!!
பாங்காங் சோ ஏரியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளுக்கு அருகே சீனா புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பாங்காங் சோ ஏரியைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளுக்கு அருகே சீனா புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக்கைச் சுற்றியுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகே இந்த கட்டமைப்பு உருவாகியுள்ளது.
செயற்கைக்கோள் புகைப்பட நிபுணர் டேமியன் சைமன், இதற்கான புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ரேடார்களை மோசமான வானிலையிலிருந்து பாதுகாக்கும் வகையில் பெரிய குவிமாட வடிவில் இந்த கட்டமைப்புகள் அமைந்துள்ளன. அதே நேரத்தில் மின்காந்தமாக பெறப்படும் செய்திகளையும் எந்த சிதைவும் இல்லாமல் பெறுவதற்கு இந்த குவிமாடங்கள் உதவுகின்றன என்று சைமன் பதிவிட்டுள்ளார்.
சைமன் மேலும் தனது டுவிட்டர் பதிவில், ''கட்டமைப்பில் இருக்கும் சோலார் பேனல்கள் மற்றும் ரேடார் காட்சிகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இது "இந்தியா, சீனாவுக்கு இடையே முக்கிய எல்லையாக கருதப்படும், நிலப்பரப்பு மற்றும் ஏரி பகுதிகளை துல்லியமாக காட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா, சீனா இடையே கடந்தாண்டு துவக்கத்தில், ஃபிங்கர் 4 பகுதியில் சண்டை மூளும் சூழல் உருவானது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பரஸ்பரம் ஏற்பட்டது. இது பின்னர், இருதரப்பு எல்லைகளை வரையறுப்பது குறித்து பல சுற்றுப் பேச்சுக்களுக்கு வழிவகுத்தது.
இந்திய ராணுவ நடமாட்டங்களை நோட்டமிடும் வகையில், கடந்தாண்டு, ஜனவரி மாதம், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாங்காங் டிசோ ஏரியின் குறுக்கே, சீனா பாலம் கட்டுவதாக தி பிரின்ட் செய்தி வெளியிட்டு இருந்தது. செப்டம்பர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் மத்தியில், இருதரப்புக்கும் இடையே சிக்கல் நீடித்து வரும்போது, இந்திய வீரர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் மோல்டோ பகுதிக்கு சீனா புதிய சாலையை உருவாக்கியது.
விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாள்... பிரதமர் மோடி தமிழில் புகழ்ந்து டுவிட்..!
பாங்கோங் டிசோ ஏரியின் மீது இரண்டாவது பாலத்தை சீனா உருவாக்கி வருகிறது என்று தி பிரின்ட் கடந்த மே மாதம் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த பாலமானது அகலமானதாக பெரிய அளவில் ராணுவ தளவாடப் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இருந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்திய ராணுவத்தின் கண்ணில் படாமல் தப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவை எதிர்கொள்ள சமீபத்தில் இந்தியாவும் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் உயரமான இடங்களுக்கு ராணுவ தளவாடங்களை கொண்டு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.