விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாள்... பிரதமர் மோடி தமிழில் புகழ்ந்து டுவிட்..!
விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவரின் 307வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துகிறேன் என தமிழில் டுவிட் செய்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவரின் 307வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துகிறேன் என தமிழில் டுவிட் செய்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இதையும் படிங்க;- பிரதமர் மோடிக்கான உணவு செலவை ஏற்பது யார்? பகீர் தகவலால் ஆச்சரியம்!!
இந்நிலையில், பூலித்தேவரின் 307வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.