நேரடி கேஸ் மானியம் பெற வேண்டுமா ....??? நவம்பர் 30 கடைசி நாள் ...!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பேரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு கடந்த ஜுலை மாதத்திற்குள் ஆதார் எண்கள் சமர்பிக்க தவறிய வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே சமயத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் மானியத்தை தனி வங்கி கணக்கு ஒன்றில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் நேரடி கேஸ் மானியம் பெற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த ஜுலை மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட சமையல் கேஸ் மானியத்தை திரும்ப வழங்குவதுடன் வரும் காலத்திற்கான சிலிண்டர் மானியமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சத்து 63 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரம் பேர் மானியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.