டெங்கு, ரத்தகொதிப்பு, சிக்கன் குனியாவிற்கு அறிமுகமாகிறது புதிய இன்சூரன்ஸ் ...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், ஆட்-ஆன் பிரிமியங்களை ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றன.

ஒரு சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஆட்-ஆன் இன்சூரன்ஸ் திட்டத்தில் டெங்குவை சேர்த்தது. இதில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மருத்துவ செலவுக்கான பிரீமியம் 444 முதல் 578 வரை நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்சூரன்ஸ் மூலம், சுமார் 6,300 பேர் பலன் பெற்றுள்ளனர்.

இதுதவிர முன் மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே 10,000 வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற இந்த மருத்துவ திட்டம் வகை செய்கிறது.

மேலும் இது போன்ற இன்சூரன்ஸ் சலுகையை , பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக டெங்கு, சினக்குன்குனியா, ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கும் தனியாக ஆட்-ஆன் திட்டங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்சூரன்ஸ் மூலம் ,சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை பயன்படுத்த முடியும் என தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.