Delhivery IPO gmp :சப்ளை செயின் நிறுவனமான டெல்லிவரியின் ஐபிஓ விற்பனை இன்று தொடங்கிய நிலையில் ஒரு மணிநேரத்தில் 3 சதவீதம் மட்டுமே விண்ணப்பம் வந்து மந்தமாகத் தொடங்கியுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 16சதவீதம் விருப்ப விண்ணப்பம் வந்துள்ளன.
சப்ளை செயின் நிறுவனமான டெல்லிவரியின் ஐபிஓ விற்பனை இன்று தொடங்கிய நிலையில் ஒரு மணிநேரத்தில் 3 சதவீதம் மட்டுமே விண்ணப்பம் வந்து மந்தமாகத் தொடங்கியுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 16சதவீதம் விருப்ப விண்ணப்பம் வந்துள்ளன.
டெல்லிவரி நிறுவனம் ஐபிஓ விற்பனை இன்று தொடங்கி வரும் 13ம் தேதிவரை நடக்கிறது. இந்த ஐபிஓ விற்பனை மூலம் ரூ.5,235 கோடி முதலீடு திரட்ட இருக்கிறது டெல்லிவரி நிறுவனம். டெல்லிவரி நிறுவனம் தனது பங்குகள் ரூ.462 முதல் ரூ.487 வரை விற்பனை செய்கிறது
மும்பை பங்குச்சந்தையில் கிடைத்த புள்ளிவிவரங்கள்படி, ஐபிஓ விற்பனை தொடங்கி ஒருமணிநேரத்தில் 18,78,450 பங்குகளுக்கு மட்டுமே விருப்பவிண்ணப்பங்கள் அதாவது 3 சதவீதம் மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 25 லட்சத்து 41 ஆயிரத்து23பங்குகள் விற்கப்பட உள்ளன.

சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 16சதவீதம் விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஊழியர்கள் தரப்பில் 2 சதவீதம் மட்டுமே விருப்ப விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், ஹெஎன்ஐ மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை இன்னும் ஈர்க்கவில்லை.
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காக 75 சதவீதப் பங்குகளும், நிறுவனமில்லாத வாங்குவோருக்கு 15 சதவீதப் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.10 சதவீதப் பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் பங்குகள் வாங்க வேண்டும். ஒருலாட் என்பது 30 பங்குகளைக் கொண்டதாகும். ரூ.1235 கோடி மதிப்புள்ள பங்குகளை டெல்லிவரி நிறுவனம் தள்ளுபடி விலையிலும், ரூ.4ஆயிரம் கோடி பங்குகளை நேரடியாகவும் விற்கிறது.

எல்ஐசி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தள்ளுபடி அளித்ததுபோன்று, டெல்லிவரி நிறுவனமும் ஊழியர்களுக்கு தள்ளுபடி அளித்துள்ளது. இதன்படி ஒரு பங்கிற்கு ரூ.25 தள்ளுபடி வழங்க இருக்கிறது.
டெல்லி குருகிராமைச் சேர்ந்த டெல்லிவரி நிறுவனம் முழுக்க முழுக்க சரக்குப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளது. நாடுமுழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் டெல்லிவரி நிறுவனம் தனது கிளைகளை உருவாக்கியுள்ளது. 17ஆயிரத்து 45 பின்கோடுகள் இருக்கும் நகரங்களுக்கு டெல்லிவரி நிறுவனம் சேவையை வழங்குகிறது.

பெரும்பாலான பங்கு தரகு நிறுவனங்கள் கருத்துப்படி, “ பங்கு விலை அதிகம், நிறுவனத்தின் இழப்பு, அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போன்றவற்றால் ஐபிஓவில் ஈடுபடுவது யோசித்து எடுக்க வேண்டிய முடிவு” எனத் தெரிவி்த்துள்ளன. ஆனால், சில நிறுவனங்கள் நீண்டகால பலனின்அடிப்படையில் ஐபிஓவில் பங்கேற்று பங்குகளை வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளன
