crude oil price: கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையுமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வர்த்தகத்தின் போது பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. ஆனால், இன்றைய வர்த்தகத்தில் மீண்டும் 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது.

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வர்த்தகத்தின் போது பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. ஆனால், இன்றைய வர்த்தகத்தில் மீண்டும் 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது.

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

HDFC ,HDFC வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம், நார்வேயில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் ஏற்றுமதியை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் விலை திடீரென சரிந்தது. 
சர்வதேச சந்தையில் நேற்று வர்த்தகத்தின் போது, பிரன்ட் கச்சா எண்ணெய் 9.4 சதவீதம் சரிந்து, அதாவது 10.65 டாலர்குறைந்து, பேரல் 102.85 டாலராக வீழ்ச்சி அடைந்தது. 

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 9.36 டாலர் அதாவது 8.6% சரிந்து, 99.07 டாலராக வீழ்ச்சி அடைந்தது. இதனால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை வந்துவிட்டதா என்ற அச்சம் எழுந்தது.

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

விவோ செல்போன் நிறுவனத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு: 44 இடங்களில் அதிகாரிகள் சோதனை

இதுகுறித்து நியூயார்க்கின் மிஜுஹோ சந்தைஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ராபர்ட் யாஜர் கூறுகையில் “ சந்தை மிகுந்த பதற்றத்துடன் இருக்கிறது. உலகளவில் பொருளதார மந்தநிலை வருவதற்கு வாய்ப்புக் குறைவு என தெளிவாக விளக்கம் அளித்தால்தான் மட்டுமே இந்தப் பதற்றத்தைத் தணிக்க முடியும். முதலீட்டாளர்கள் கடும் நெருக்கடியை, அழுத்தத்தைச்சந்திக்கிறார்கள். 

எண்ணெய் நிறுவனப் பங்குகள் கடும் சரிவில் உள்ளன. பணவீக்கம் உயர்ந்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்தியவங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்தி வருகின்றன. ஒருவேளை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் முதலில், எரிபொருளுக்கான தேவையைத்தான் பாதிக்கும், படிப்படியாக தேவை குறையத் தொடங்கும். ஆனால், அப்படி ஏதும் இப்போது இல்லை” எனத் தெரிவித்தார்.

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

3 ஆண்டுகளில் இல்லாத அளவு ஐடிசி பங்குகள்விலை உயர்வு: 10% அதிகரிப்பு: பங்குகளை விற்கலாமா?

இன்று வர்த்தகத்தின் போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.82 டாலர் அதிகரி்த்து 105.59 டாலராக அதிகரித்தது. 

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.46 டாலர் அதிகரித்து, 101.95 டாலராக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் முதல்முறையாக பேரல் 100 டாலருக்கும் கீழ் செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் சரிந்தநிலையில் சற்று உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய எரிபொருள் சப்ளை செய்யும் நாடான நார்வேயில் நார்வேஜியன் எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், எரிபொருள், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை 56 சதவீதம் குறைத்தது. இந்தப் பதற்றத்தால், கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்பதால் இன்று காலை முதல் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

ஆசியப் பங்குச்சந்தைகள் திடீர் உயர்வு: என்ன காரணம்? சீனா மீதான கட்டுப்பாடுகள் நீக்கமா?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சர்வதேசந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்ததால் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் , சர்வதேச சந்தையில் 2 வாரங்கள் விலை சராசரியை அடிப்படையாக வைத்துதான் விலையை நிர்ணயிக்கின்றன. 

பெட்ரோல், டீசலுக்கு ஏற்றுமதி வரி: ரிலையன்ஸ், வேதாந்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

crude oil price falls below 100 dollar per barrel: recession risk grow

ஆதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்கும் கீழ் குறைந்து குறைந்தபட்சம் 10 நாட்களாவது நீடித்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவாய்ப்புண்டு. இருப்பினும், தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைக்கே லிட்டருக்கு ரூ.25 வரை எண்ணெய்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பது உறுதியற்றதுதான்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios