congress party : நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

79-வயதான மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார், பாஜகவைுயும் ஆர்எஸ்எஸ்மைப்பையும் கடுமையாக விமர்சித்துப் பேசிவரும்நிலையில் அமலாக்கப்பிரிவு சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு நாளேட்டுக்கு இடம் வாங்கியது தொடரபாக நடந்த ஊழல் வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் யங்இந்தியா தனியார் நிறுவனத்தை ஏமாற்றி கோடிக்கணக்கான நிலத்தை வாங்கியதாக ஏமாற்றுதல், சதித்திட்டம், குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு உள்ளது.

குற்றச்சாட்டு

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி தொடர்ந்து வழக்கில் நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ.90.50 கோடி நிலத்தை ரூ.50 லட்சம் கொடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி வாங்கிவிட்டதாக குற்றசம்சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேரில் ஆஜராக அமாலக்கப்பிரிவு சம்மன்அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே நேரில் விசாரணைக்கு ஆஜராகினார் என்று செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கேயிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது, எவ்வளவு நேரம் விசாரணை நடத்தப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் மல்லிகார்ஜூன கார்கேயின் வாக்குமூலங்கள் அனைத்து சட்டவிரோத பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது