பட்ஜெட் தாக்கல் :

2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து பல்வேறு வகையான பொருட்களுக்கு வரியும் விதிக்கப்பட்டது.மேலும், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

வரிவிதிப்பு :

பட்ஜெட்டில் பல்வேறு விதமான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.குறிப்பான புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் மசாலா வரி :

பான்மசாலா பொருட்களுக்கு கலால் வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இத மூலம், இதனுடைய விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேப்போன்று புகையிலைக்கு கலால் வரி 4.2 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வரி :

புகையிலை கலந்த பான் மசாலாவாக இருந்தால் அதற்கான கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், இதேப்போன்று பில்டர் அல்லாத சிகரெட்டுகள் 65 மிமீ-க்குள் இருந்தால், ஆயிரம் சிகரெட்டுகளுக்கு ரூ.311 கலால் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.215-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுருட்டு மற்றும் பீடிக்கான கலால் வரியும் சிறிது உயர்ந்துள்ளது.

1000 சுருட்டு :

1000 சுருட்டு அல்லது பீடிக்கான கலால் வரி இனிமேல் 12.5 சதவீதம் அல்லது ரூ.4,006, இதில் எது அதிகமோ, அந்த வரி விதிக்கப்படும் என்றும், முன்னதாக இது 12.5 சதவீதம் அல்லது ரூ.3,755-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.