Asianet News TamilAsianet News Tamil

chitra ramkrishna : சித்ராவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்: திஹார் சிறையில் அமலாக்கப்பிரிவு விசாரணை

chitra ramkrishna : கோ-லொகேஷன் வழக்கில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராம்கிருஷ்ணனிடம் திஹார் சிறையில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

chitra ramkrishna  : ED questions ex-NSE MD Chitra Ramkrishna in money laundering case
Author
New Delhi, First Published May 24, 2022, 2:53 PM IST

கோ-லொகேஷன் வழக்கில் தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராம்கிருஷ்ணனிடம் திஹார் சிறையில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் சித்ராவிடம் அமாலாக்கப்பிரிவு அதிகாரிகள் இரு முறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

chitra ramkrishna  : ED questions ex-NSE MD Chitra Ramkrishna in money laundering case

 இதுதவிர இந்த வழக்கில் சிபிஐ தனியாகவும், வருமானவரி்த்துறை தனியாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சித்ரா ராம்கிருஷ்ணனுக்கு சிக்கல் மேல் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால்டெல்லி உயர் நீதிமன்றத்தில் சித்ரா ராம்கிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் ஜாமீன் கிடைக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. 

ரூ.4.21 கோடி ஊதியம்

என்எஸ்இ தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா நியமிக்கப்பட்டபின், அவருக்கு உதவியாக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்றும், விதிமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. 

chitra ramkrishna  : ED questions ex-NSE MD Chitra Ramkrishna in money laundering case

இதில் ஆனந்த் சுப்பிரமணியனை முதலில் சித்ரா தனது ஆலோசகராகவும், பின்னர் குரூப் ஆப்ரேட்டிங் ஆபிஸராக பதவி உயர்த்தினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4.21 கோடி ஊதியம் வழங்கப்பட்டது. 

ஆனந்த் சுப்பிரமணியனுக்கு குறுகிய காலத்தில் அதிகமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறித்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி விசாரணை நடத்தி, சித்ரா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்தது.

சிபிஐ வழக்கு

இந்த வழக்கில் சட்டவிரோதமாகப் பணம்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, அமலாக்க்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

chitra ramkrishna  : ED questions ex-NSE MD Chitra Ramkrishna in money laundering case

சித்ரா ராம்கிருஷ்ணன் என்எஸ்இ சிஇஓவாக 2013 முதல் 2016ம் ஆண்டுவரை  இருந்த காலத்தில் கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டு, பங்குபரிவர்த்தனை தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது. 

ஜாமீன் மனு

இந்த கோலொகேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சித்ரா ராம்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் இருவரையும் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

chitra ramkrishna  : ED questions ex-NSE MD Chitra Ramkrishna in money laundering case

தற்போது இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சித்ரா ராம்கிருஷ்ணன் மட்டும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios