car sales may 2022 :கடந்த சில ஆண்டுகளாக நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சிக்கல், கொரோனா வைரஸால் தொழில்முடக்கம் போன்றவற்றால் குறைந்தவிலைக் கார்கள் விற்பனை குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சிக்கல், கொரோனா வைரஸால் தொழில்முடக்கம் போன்றவற்றால் குறைந்தவிலைக் கார்கள் விற்பனை குறைந்துள்ளது.
உயர்ந்த ரக கார்கள் விற்பனை
இதுஒருபுறம் இருக்க, வருமானம் உயர்வு, விலைவாசி உயர்கிறது என்ற சிந்தனையில்லாத வாங்குவோர்களால் சந்தையில் அதிகவிலை உள்ள கார்கள் விற்பனை தொடர்ந்து உயரந்து வருகிறது என்று மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மோட்டார் வாகன நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விற்பனை குறைவு
கடந்த 2021-22 நிதிஆண்டில், ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக விலையுள்ள கார்கள் விற்பனை, குறைந்தவிலைக் கார்கள் விற்பனையைவிட 5 மடங்கு அதிகரி்த்துள்ளது. 2019-20ம் நிதி ஆண்டு பயணிகள் வாகனச் சந்தையில் 24 சதவீதம் இருந்த விற்பனையையே கடந்த ஆண்டு கடந்துவிட்டது. 2022 மார்ச் மாதம் முடிந்த கடந்த நிதி ஆண்டில், விலைஉயர்ந்த கார்கள் விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது, விலை குறைந்த கார்கள் விற்பனை வெறும் 7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
என்ன காரணம்
கார்கள் விற்பனையில் பெரிய இடைவெளி ஏற்படுவதற்கு காரணம் குறித்து கிரிசில் ஆய்வு கூறுகையில் “ மக்களிடையே வருமானம் உயர்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும், விலைகுறைந்த கார்களின் திடீர் விலை உயர்வு, கார் தேர்வுக்கு சில நிறுவனங்கள் மட்டுமே இருப்பது, உயர்ந்தவிலை கார்களின் புதியமாடல்கள் அறிமுகம் ஆகியவைதான் காரணம்” எனத் தெரிவித்துள்ளது.

முதல்முறையாக கார்வாங்குவோர்
சிறிய கார்சந்தை என்று கூறப்படும் இந்தியாவில், சிறியரக கார்களை பெரும்பாலும் முதல்முறையாக கார் வாங்குவோர்தான் வாங்குகிறார்கள். அதிலும் கொரோனா பெருந்தொற்று காரணமா தொழில்முடக்கம், வருமானம் குறைவு, போன்ற காரணங்களால் முதல்முறையாக கார்வாங்குவோர் தங்களின் கார் வாங்கும் எண்ணத்தை தள்ளி வைத்தனர்.
விலைவாசி உயர்வு
கிரிசில் பொருளாதார ஆய்வு நிறுவனம் கூற்றுப்படி “ நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வருமானம் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துவிட்டது. இதந் காரணமாக உயர்ந்த விலையுள்ள கார்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் சிறிய மர்றும் குறைந்த நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஊதியம் 10 சதவீதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளது.
விற்பனை சரிவுக்கு காரணம்
மாருதி சுஸூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா கூறுகையில் “ கடந்த 3ஆண்டுகளாக குறைந்தவிலையுள் கார்களுக்கான சந்தை மந்தமாகவே இருக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனமோ அல்லது சிறியரக கார்களை பயன்படுத்துவோருக்கான சந்தை அளவு சுருங்கிவருகிறது.
அதுமட்டுமல்லாமல் பேனட் இல்லாத ஹேட்ச்பேக்ஸ் வகைக் கார்கள் கடந்த நிதியாண்டில் 11.50 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 2018-19ம் ஆண்டில் 15.50 லட்சம் கார்கள் விற்பனையாகின. சிறியரக கார்கள் விற்பனை குறைந்ததற்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள், மாநில அரசுகளின் வரி உயர்வு, கார் தயாரிப்புக்கான பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் சமூகத்தில் பெரும்பகுதி மக்கள் கார் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தது. இரு சக்கர வாகனம் பயன்படுத்திவருபவர்கள் கார் வாங்கும் எண்ணத்துடன் இருப்போர், 80 சதவீதம் வங்கியில் கடன் பெற்றே கார் வாங்குகிறார்கள்.

விலை உயர்வு
மாருதிசுஸூகி நிறுவனம் கூட கடந்த நிதியாண்டில் சிறிய ரககார்கள் விலையை 20 சதவீதம் உயர்த்தியது, நடுத்தரமான ஹேட்ச்பேக் கார்களான செலிரியோ, ஸ்விப்ட் ஆகிய கார்கள் விலை 38சதவீதமும், எஸ்யுவி கார்கள் விலை 13.5 சதவீதமும், நடுத்தர ரக எஸ்யுவி கார்கள் விலை 20சதவீதம் விலை உயர்ந்தன” எனத் தெரிவித்தா்ர்.
கொரோனா தொற்று
நோமுரா பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் மூத்த தலைவர் அஷிம் ஷர்மா கூறுகையில் “ கொரோனாவுக்கு முன் மக்களின் வருமானம் கணிசமாக உயர்ந்ததால், பெரியரக கார்கள் பக்கம் விருப்பத்தை திருப்பினார்கள். ஆனால் பெருந்தொற்றுக்குப்பின் நிலைமை மாறிவிட்டது. நகர்ப்புறங்களில் கொரோனா பரவத் தொடங்கியபோது, வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு நடந்தது. சிறியரக கார்களை வாங்கிப் பயன்படுத்துவோர் வேலையிழப்பு, ஊதியக்குறைப்புக்கு ஆளாகி பாதிக்கப்பட்டார்கள். கிராமப்புறங்களில் கொரோனா பரவியபோதும் அங்கும் இதே நிலைமைதான் இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பிஎஸ்6 ரக எஞ்சின்களை உருவாக்கி கார்களை தயாரிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் கார்கள் விலை உயர்ந்தன. இந்த ரக எஞ்சின்களை தயாரிக்க ஆகும் செலவு அதிகமானதால், கார் விலையும் உயர்ந்தது. ஏற்கெனவே வேலையிழப்பு, வருமானம் குறைவு, ஊதியக்குறைப்பில் சிக்கியிருக்கும் மக்களுக்கு கார்கள்விலை உயர்வு போன்றவற்றால், கார்கள் விற்பனை சரியத் தொடங்கியது
கடந்த 2018ம் ஆண்டில் 110 சிசி பைக் எக்ஸ்ஷோரும்விலை ரூ.50ஆயிரமாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.70ஆயிரத்துக்கு குறைவில்லாமல் விற்கிறது. அதேபோல சிறியகார்கள் விலை ரூ.2.8 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம்வரை இருந்தது. ஆனால், தற்போது ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4.50லட்சம்வரை விற்கிறது” எனத் தெரிவித்தார்
