பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அடுத்த மிகப்பெரிய சீர்திருத்த திட்டமாகப் பார்க்கப்படுவது அரசு உபரி நிலங்கள், கட்டிடங்களை பணமாக்கும் நிறுவனம் அமைத்தலாகும்.இந்தத் திட்டத்துக்கு முறைப்படி மத்தியஅ மைச்சரவை நேற்று அனுமதியளி்த்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அடுத்த மிகப்பெரிய சீர்திருத்த திட்டமாகப் பார்க்கப்படுவது அரசு உபரி நிலங்கள், கட்டிடங்களை பணமாக்கும் நிறுவனம் அமைத்தலாகும்.இந்தத் திட்டத்துக்கு முறைப்படி மத்தியஅ மைச்சரவை நேற்று அனுமதியளி்த்துள்ளது.

ரூ.5ஆயிரம் கோடி

தேசிய நில பணமாக்கும் கழகம்(NLMC) என்ற பெயரில் மத்திய அரசால் இந்த நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. முழுமையாக அரசால் நடத்தப்படும் இந்த நிறுவனம், அரசுக்கு சொந்தமாக உபரியாக இருக்கும் நிலங்கள், கட்டிடங்களை விற்று பணமாக்கும் திட்டமாகும். 
தேசிய நில பணமாக்கல் நிறுவனத்தை அமைக்க ரூ.5ஆயிரம் கோடி ஒதுக்கவும் பங்கு முதலீடாக ரூ.150 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய நில பணமாக்கல் நிறுவனம் என்றால் என்ன

தேசிய நில பணமாக்கல் நிறுவனம் என்பது, மத்திய அரசுக்கு சொந்தமான, பொதுத்துறை நிறுவனங்களில் உபரியாக இருக்கும் நிலங்கள், கட்டிடங்கள் உள்ளி்ட்ட அரசின் சொத்துக்களை விற்று பணமாக்குவதாகும். மத்திய பொதுத்துறை நிறுவனத்துக்கு 3,400 ஏக்கர் நிலம் உபரியாக இருக்கிறது, இதுவரை பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், பிஅன்ட்ஆர், பிபிசிஎல், பிஇஎல்எல் லிமிடட், ஹெச்எம்டி ஆகியவற்றுக்குச் சொந்தமாகவும் நிலங்கள், கட்டிடங்கள் உபரியாக உள்ளன. இவற்றை விற்று பணாக்கும் திட்டமாக்கும் நிறுவனமாகும். 

எவ்வாறு தேசிய நில பணமாக்கல் நிறுவனம் இயங்குகிறது

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில்இருக்கும் முக்கியத்துவம் இல்லாத சொத்துக்களை பணமாக்குவது. அதாவது, இதுவரை பயன்படுத்தப்படாத நிலங்கள், பழைய கட்டிங்கள் ஆகியவற்றின் மதிப்பிட்டு, அதிலிருந்து வருமானம் வருமாறு செய்தல். மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள், இடங்கள், கட்டிங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிக்கும் ஒரு மேலாளர் போல் தேசிய நில பணமாக்கல் நிறுவனம் செயல்படும்.

இந்த நிறுவனத்தில் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி, நில பணமாக்கலுக்கு தேவையான, தகுதியுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்படும். இந்த நிறுவனம் அரசின் உபரி சொத்துக்களை விற்று கிடைக்கும்பணத்தை ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்து வருமானமாக அரசுக்கு வழங்கும். நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சக அதிகாரிகள், தனியார் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாகஇடம் பெறுவார்கள்.

பொருளாதாரஆய்வறிக்கை

2022ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2021-22 ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டுக்குள், மத்திய அரசின் உபரி நிலங்களை பணமாக்கும் திட்டம் மூலம் ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடியும். குறிப்பாக சாலைப்போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயுகுழாய், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் இருந்துமட்டும் 83 சதவீதம் திரட்ட முடியும்.

அடுத்த மிகப்பெரிய சீர்திருத்தமா?

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது குறிப்பிடுகையில் “ அரசுக்குசொந்தமான நிலத்தை நேரடியாகவோ அல்லது சலுகை விலையிலோ அதற்கு ஈடான வழியில் வழங்குவது நிலத்தை பணமாக்குதல். இந்தநோக்கத்துக்காக சிறப்பு திறமைகள் கொண்டவர்கள் தேவை. சிறப்பு நோக்கப் பிரிவு உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் முதலீட்டு விலக்கல், பொதுச்சொத்து மேலாண்மைப் பிரிவு செயலாளர் கூறுகையில் “ அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் மிகப்பெரியதாக இருக்கும். அரசின் நிலங்களை மதிப்பீடு செய்ய இன்னும் தொடங்கவில்லை. ஏராளமான நிலங்கள் நகர்புற புதுப்பித்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றநல்ல நிலங்களும் உள்ளன” எனத் தெரிவித்தார்

விமர்சனம்

முதலீ்ட்டு விலக்கல் துறை என்று ஏற்கெனவே மத்தியஅரசில்இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்ட அளவு அரசின் பங்குகளை விற்க வேண்டும் என்று அரசு நினைத்தபோதிலும் அது நிறைவேற முடியவில்லை. நடப்பு நிதியாண்டு கூட எல்ஐசி பங்குகளை விற்று ரூ.75ஆயிரம் கோடி திரட்ட அரசுமுயன்றது. ஆனால்,எல்ஐசி ஐபிஓ தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது.


இந்நிலையில்தான் அரசு நிறவனங்களுக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்கள், முக்கியத்துவம் இல்லாத சொத்துக்களை விலைக்கு விற்று பணமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே செயல்படாத, சரியாகச்செயல்படாத நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்கிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் அரசின் நிலங்கள், கட்டிங்களை விற்க தனியாக ஒருநிறுவனம் உருவாக்கப்படுகிறது