Oil prices: சர்வதேச சந்தையில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை நினைத்தை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் அலறுகின்றன.
சர்வதேச சந்தையில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை நினைத்தை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் அலறுகின்றன.
பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 118 டாலராக இன்று அதிகரித்தது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும், கடந்த 2013ம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவை பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும் நோக்கில்அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளனன.இதனால் ஏற்றுமதி, இறக்குமதி ரஷ்யா செய்வது கடினமாகும்.
ஆனால் மேற்கத்தியநாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடை அந்த நாடுகளுக்கே ஃபேக் பயர் ஆகிவருகிறது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடையைவிதித்ததில்இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வருகிறது
ஏனென்றால் உலகிலேயே 3வது பெரிய கச்சா எண்ணெய்உற்பத்தியாளர் ரஷ்யாதான். ரஷ்யாவிலிருந்து நாள்தோறும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு அமெரி்க்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், அங்கிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால், நாள்தோறும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போர் தொடங்கும் முன் 100டாலராக இருந்த பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு வாரத்தில் 118 டாலராக அதிகரி்த்துள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்ஸாஸ் கச்சா எண்ணெய் பேரல் 114.70 டாலருக்கு இன்று விற்பனையானது. ஏறக்குரைய 11 ஆண்டுகளுக்குப்பின் இந்த விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தை விலைகளில் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் அமெரிக்கா இருந்து வருகிறது.

கச்ச எண்ணெய் பற்றாக்குறையை போக்க வளைகுடா கூட்டமைப்பு நாடுகளான ஒபேக் கூட்டமைப்பிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் கோரி்க்கை விடுத்தன. ஆனால், தங்களின் தினசரி உற்பத்தியான 4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தியை உயர்த்த முடியாது எனத் தெரிவித்துவிட்டன.
இதனால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துவிட்டு, கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரும் சூழலையும், விலை உயர்வையும், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் எதிர்நோக்கியுள்ளன
