பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உலகின் முதல் நிறம் மாறும் கார் மாடலை லாஸ் வேகாஸ் சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்தது.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ. லாஸ் வேகாஸ் சி.இ.எஸ். நிகழ்வில் உலகின் முதல் நிறம் மாறும் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் கார் iX ஃபுளோ என அழைக்கப்படுகிறது. இந்த கார் எலெக்டிரானிக் இன்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரே மற்றும் வைட் நிறங்களை கலந்து பல்வேறு நிறங்களில் மாறுகிறது.
தற்போது ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரிக் சிக்னல்களை கொண்டு நிற மாற்றம் செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் காரினுள் வழங்கப்படும் பட்டன் கொண்டோ அல்லது ஜெஸ்ட்யூர் அசைவுகளை கொண்டே காரின் நிறத்தை மாற்றும் வசதி வழங்கப்படும். நிறம் மாற்றவே எலெக்ட்ரிக் சிக்னல்கள் தேவைப்படும் நிலையில், ஓட்டுனர் தேர்வு செய்யும் நிறத்தை தக்கவைக்க எந்த விதமான சக்தியும் தேவைப்படாது.

"இந்த நிறம் மாறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெயில் காலங்களில் காரின் நிறத்தை வெள்ளை நிறத்திற்கு மாற்றிக் கொண்டால் சூரிய வெளிச்சம் காரினுள் இறங்காது. மேலும் குளிர்காலத்தில் காரின் நிறத்தை மீண்டும் மாற்றி வெப்பத்தை ஈர்க்க பயன்படுத்திக் கொள்ள முடியும்," என பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஆய்வு பொறியாளர் ஸ்டெல்லா கிளார்க் தெரிவித்தார்.
சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் கிரே மற்றும் வைட் நிறங்களுக்கு மட்டும் மாறியது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு மேலும் பல நிறங்களை இதே போன்று மாற்றிக் கொள்ள முடியும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது.
