மகளின் திருமணத்திற்கு 550 கோடி செலவு செய்தவர்; திவாலாகி சிறைக்கு சென்ற கோடீஸ்வரர் யார் தெரியுமா?
ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த பிரமோத் மிட்டல், தற்போது திவாலாகி தன் மனைவி மற்றும் குழந்தைகளைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களாக இருந்த பல தொழிலதிபர்களின் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறுவதண்டு. பல காரணங்களால் சில கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். சிலர் அன்றாடச் செலவுகளுக்கு மனைவி மற்றும் குழந்தைகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட கோடீஸ்வரர்களில் இஸ்பாட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (தற்போது ஜேஎஸ்டபிள்யூ இஸ்பாட் ஸ்டீல்) தலைவராக இருந்த பிரமோத் மிட்டல் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். அவர் தனது கடனாளிகளுக்கு 2.5 பில்லியன் பவுண்டுகள் (அப்போது சுமார் ரூ. 24,000 கோடி) செலுத்திய பின்னர் 2020 இல் திவாலானதாக அறிவிக்கப்பட்டார்.
இவர் இந்திய கோடீஸ்வரரும் எஃகு அதிபருமான லட்சுமி மிட்டலின் சகோதரர் ஆவார். பிரமோத் மிட்டல் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். தனது ஆடம்பர் செலவினங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் 2013 இல் தனது மகள் ஷ்ரிஸ்டியின் திருமணத்திற்காக சுமார் 550 கோடி ரூபாய் செலவிட்டார்.
அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? ஒவ்வொருக்கும் எவ்வளவு சொத்து?
68 வயதான அவர் ஜூன் 2020 இல் லண்டன் நீதிமன்றத்தில் 130 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் கடன் இருந்ததால் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். திவால்நிலைத் தாக்கல் செய்ததில், மிட்டல் தனக்கு தனிப்பட்ட வருமானம் இல்லை என்றும், அந்த நேரத்தில் டெல்லியில் வெறும் 45 பவுண்டுகள் மட்டுமே தனது பெயருக்கு இருந்த ஒரே சொத்து என்றும் கூறினார்.
பிரமோத் மிட்டல் 2019 இல் போஸ்னியாவில் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பிரமோத் ஒருமுறை GIKIL என்ற போஸ்னிய கோக் தயாரிப்பாளரின் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாக ஒப்புக்கொண்டார். அவரது குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் GIKIL இன் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக கையெழுத்திட்டது. லண்டனில் உள்ள அதன் எஃகு வர்த்தக உத்தரவாத நிறுவனத்திற்கு GIKIL திருப்பிச் செலுத்த முடியவில்லை.
திவாலான தந்தையின் வணிக சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்த மகன்கள்; அனில் அம்பானியின் மகன்கள் பற்றி தெரியுமா?
ஆனால் இன்று, அவரது சகோதரர் லக்ஷ்மி மிட்டல், ஃபோர்ப்ஸ் படி, 15.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இந்திய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.