sitharaman: உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை கட்டாயமாக நியமக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு
உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை வங்கிகள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை வங்கிகள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று 75வது இந்திய வங்கிகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது குறித்து தி இந்து(ஆங்கிலம்) நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை
அதில் அவர் கூறுகையில் “ வங்கிகளில் உள்ளூர் மொழி பேசத்தெரிந்த ஊழியர்கள் கட்டாயம் நியமிக்க வேண்டும். வங்கிகள் பணம் பெற்று, கடன் கொடுத்து வியாபாரம் செய்கின்றன. வங்கிகள் ஏதும் உயர்ந்த மதிப்புகளை மக்களிடம் உருவாக்கவில்லை
வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளரிடம் உள்ளூர் மொழியில் பேசத் தெரியாதவர்களை நியமித்து, ஏய் உங்களுக்கு இந்தி பேசத் தெரியாதா, அப்போ நீ இந்தியன் இல்லை என்று தேசப்பற்றோடு சொல்வதெல்லாம் போதும். இதுபோன்று பேசுவது வங்கிகளின் வியாபாரத்துக்கு உதவாது.
நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. ஆதலால் இதுபோன்று உள்ளூர் மொழி பேசத்தெரிந்த ஊழியர்கள் இருப்பது அவசியம். அவர்களை பணிக்கு எடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டவேண்டும்.அதுமட்டுமல்லாமல் ஒருவரை கிளைமட்ட அளவில் வங்கிகள் நியமிக்கும்போது, அந்தப் பகுதி மக்களின் மொழியை பேசக்கூடியவராக என்பதை உறுதி செய்து நியமிக்க வேண்டும்.
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பு லைசன்ஸ் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி
உள்ளூர் மொழி தெரியாத ஊழியர்களை வாடிக்கையாளர்களை கையாளுவதற்கு நியமிக்கக் கூடாது. அவ்வாறு நியமிக்கும் முன் வங்கி நிர்வாகம் அதிகமான முறை அறிவார்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் உருவாக ஊக்கப்படுத்த வேண்டும்.
நான் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதை மிகுந்த உற்சாகத்துடன் நாம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
5 நாட்களுக்குப்பின் தங்கம் விலை உயர்வு ! சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
வாடிக்கையாளர்களை எந்த இடத்தில் சந்தித்தாலும், விதிமுறைகளை மட்டும் மாற்றாமல், அவர்களுடன் வங்கி வியாபாரம் பற்றி பேசலாம்” எனத் தெரிவித்தார்