தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்தநிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. 

தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்தநிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.14 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,626 ஆகவும், சவரன், ரூ.37,008 ஆகவும் இருந்தது. 

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பு லைசன்ஸ் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி

இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 14 அதிகரித்து ரூ.4,640ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120ஆக ஏற்றம் அடைந்துள்ளது. 

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,640ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 5 நாளாகச் சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. இதனால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், உலகளவில் அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற உலக வங்கியின் கணிப்பு போன்றவை பங்குச்சந்தையை நேற்று உலுக்கி எடுத்தன. இந்த எதிரொலி தங்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. 

இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி

அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும். அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது, தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து, ரூ.62.00ஆகவும், கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.62,000 ஆகவும் விற்கப்படுகிறது