world bank: recession: உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை
உலகளவில் மத்திய வங்கிகள் தொடர்ந்து கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தி வருவதால், 2023ம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
உலகளவில் மத்திய வங்கிகள் தொடர்ந்து கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தி வருவதால், 2023ம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி, பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த வாரம் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்த இருக்கும் நிலையில் உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரேமாதிரியான நிகழ்வைப் பார்த்தது இல்லை.
உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்
கடனுக்கான வட்டிவீதத்தை மத்திய வங்கிகள் உயர்த்தும்போது, வங்கிகளில் கடன் பெறுவது கடினமாகும், இதன் மூலம் விலைவாசி குறையலாம். ஆனால் மக்கள் கடன் பெறுவது கடினமாகும் அல்லது கடன் பெறுவது குறையும். இதனால் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும்.
கடந்த 1970களுக்குப்பின் உலகப் பொருளாதார வளர்ச்சி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. ஆய்வுகளின்படி, உலகின் 3 மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்கா, சீனா, ஐரோப்பா நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருக்கிறது.
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பு லைசன்ஸ் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி
இந்த சூழலில், உலகப் பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று கணிக்கிறோம். ஆதலால், உலகில் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி, தெளிவான முடிவுகளை எடுக்க வேணடும். இதன் மூலம் பொருளாதாரம் மந்நிலைநோக்கி நகர்வதைக் தடுப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர் வங்கி இருமுறை வட்டிவீதத்தை உயர்த்தியும், இன்னும் விலைவாசியும், பணவீக்கமும் குறையவி்ல்லை. இதனால், அடுத்தவாரம் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.
5 நாட்களுக்குப்பின் தங்கம் விலை உயர்வு ! சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?
வட்டிவீதம் தொடர்ந்து உயரும்பட்சத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் பின் இழுக்கப்பட்டு, அது மந்தநிலைக்கு இட்டுச் செல்லும். அதன்பின் பொருளாதார வளர்ச்சி மீண்டெழுவதற்கு நீண்டகாலமாகும்.