வங்கி FD Vs தபால் அலுவலக வைப்பு: எதில் அதிக வட்டி கிடைக்கும்? லேட்டஸ்ட் வட்டி விகிதம் எவ்வளவு?
2025 ஜனவரி-மார்ச் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றமடையவில்லை. தற்போதைய வட்டி விகிதங்கள் தொடர்ந்து பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலக வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த வட்டி விகித மாற்றங்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில் 2025 ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றவில்லை. மத்திய நிதி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஜனவரி 1, 2025 முதல் தொடங்கி, மார்ச் 31, 2025 அன்று முடிவடையும். இந்த முறை வட்டி விகிதங்களில் மாற்றமில்லை” என்று தெரிவித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு குட்நியூஸ்! இனி எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியத்தை எடுக்கலாம்!
சிறு சேமிப்பு திட்டங்களில் தற்போதைய வட்டி விகிதங்கள்?
நடப்பு காலாண்டு ஜனவரி-மார்ச் 2025க்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:
சேமிப்பு வைப்பு: 4 சதவீதம்
1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்
2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.1 சதவீதம்
5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்
5-ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.7 சதவீதம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): 7.7 சதவீதம்
கிசான் விகாஸ் பத்ரா: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்
சுகன்யா சம்ரித்தி கணக்கு: 8.2 சதவீதம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2 சதவீதம்
மாத வருமானக் கணக்கு: 7.4 சதவீதம்.
வங்கி நிலையான வைப்பு மற்றும் அஞ்சல் அலுவலக வைப்பு: வட்டி விகிதங்கள் ஒப்பீடு
தபால் நிலையங்கள் FD வட்டி விகிதங்களை 6.9 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வழங்குகின்றன, அதே நேரத்தில் வங்கிகள் 6.5 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 60 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கான 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கான வைப்புத்தொகைக்கான விகிதங்கள். மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புகளுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. பந்தன் வங்கி 1-3 கால டெபாசிட்டுகளுக்கு 8.05 சதவீதத்தில் அதிக FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
5000 ரூபாய் நோட்டு வருதா? ரிசர்வ் வங்கி என்ன சொன்னது தெரியுமா?
கடந்த நான்கு காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் இருந்தாலும், ரிசர்வ் வங்கி எம்பிசி பிப்ரவரி அல்லது ஏப்ரல் நாணயக் கொள்கை மதிப்பாய்வில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளால் இயக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் அறிவிக்கிறது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அரசாங்கம் சில திட்டங்களில் மாற்றங்களைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் என்ன?
பொதுமக்கள் தொடர்ந்து சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் திட்டங்கள் தான் சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
சேமிப்பு வைப்புகளில் 1-3 வருட கால வைப்பு மற்றும் 5 வருட தொடர் வைப்புகளும் அடங்கும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இதில் அடங்கும். சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.
PPF, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் கால வைப்புத்தொகை, NSC மற்றும் SSY போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அடுத்த காலாண்டிற்கு முடிவு செய்யப்படுகின்றன. முந்தைய காலாண்டின் அடிப்படையில் விகித மதிப்பாய்வு செய்யப்படுகிறது.