சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கு மேல் எடுத்தால் சிக்குவீர்கள்!!
சேமிப்புக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வருமான வரித் துறையின் பிடியில் இருந்து தப்பிக்க சேமிப்புக் கணக்கு வரம்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்களது சேமிப்புக் கணக்கை நிர்வகிக்கும் போது, வருமான வரித் துறையின் பிடியில் இருந்து தப்பிக்க சில வரம்புகளை கடைபிடிக்க வேண்டும். சேமிப்புக் கணக்கில் இருந்து எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.
சேமிப்புக் கணக்குகளில் முக்கிய விதிகள்:
ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) உங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்தது அல்லது எடுக்கப்பட்ட மொத்த ரொக்கம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் வருமான வரி உங்களது வீட்டுக் கதவை தட்டும் சூழல் ஏற்படும்.
நீங்கள் இந்த வரம்புகளை மீறும்போது வங்கி பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை வருமான வரித்துறைக்கு வங்கியே தெரிவித்துவிடும். வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவின்படி, ஒரு நாளில் ஒரு பரிவர்த்தனை அல்லது தொடர்புடைய பரிவர்த்தனைகளில் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுக்க முடியாது.
உயர் மதிப்பு பண பரிவர்த்தனைகள்:
ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், இது அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனையாக கருதப்படும். மேலும் வங்கி அதை வருமான வரித் துறையிடம் தெரிவித்துவிடும். வருமான வரித்துறை உங்களை அணுகும்போது நீங்கள் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கும். மேலும் அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.
பான் எப்போது தேவை?
கூடுதலாக, வங்கிகள் ஒரே நாளில் ரூ. 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க வைப்புத் தொகையை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், அத்தகைய டெபாசிட்டுகளுக்கு டெபாசிட்தாரர் பான் எண்ணை வழங்க வேண்டும். உங்களிடம் PAN இல்லை என்றால், நீங்கள் படிவம் 60 அல்லது படிவம் 61 ஐ மாற்றாக சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரித்துறை அறிவிப்பு
உங்களது சேமிப்புக் கணக்கு செயல்பாடு இந்த வரம்புகளை மீறும்பட்சத்தில் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். மேலும் உங்களது நிதிக்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டியது இருக்கும். அதிக மதிப்பு பண பரிவர்த்தனைகள் காரணமாக வருமான வரித் துறையிடம் இருந்து நீங்கள் நோட்டீஸ் பெறலாம். உங்களை நிரூபித்துக் கொள்ள உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்களது ஆவணங்கள் மட்டுமே உங்களை காப்பாற்றும்.
முதலீட்டு ஆலோசனை பெறவும்:
டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கான ஆதாரங்களை காட்டவும். பரம்பரை சொத்தில் பணம் பெறப்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும். எப்படி பதிலளிப்பது என்பது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது உங்கள் நிதியின் ஆதாரம் குறித்து தெரிவிக்க தெரியவில்லை என்றால், வரி ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவும். இதுவே சிறந்த வழியாக இருக்கும்.
இந்த விதிகள் மற்றும் வரம்புகளை அறிந்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆபத்து இல்லாமல் உங்கள் சேமிப்புக் கணக்கு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கலாம்.