athar is mudt for all except govt facilities

ஆதார் எண் கட்டாயம் இல்லை....உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு ....

ஆதார் எண் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆதார் முறை ஒருவகையில் நல்லதே. எந்த குற்றச்செயலும், ஊழல் உள்ளிட்ட அனைத்தும் தடுக்கும் வகையில் ஆதார் அனைத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது .

வங்கிக் கணக்கு, புதிய சிம் கார்ட் வாங்க, லைசன்ஸ் பெற என அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. அதே வேளையில் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெறுவது தொடங்கி, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், ஆதார் எண் கட்டாயம் எனக் கூறப்படுகிறது. அண்மையில், பள்ளி செல்லும் சிறார்கள் மதிய சத்துணவு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை மக்கள் பெரிதும் எதிர்த்தனர்.

ஆனால் இதற்கு எதிராக, உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுபியுள்ளது. அதன்படி அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, ஆதார் கட்டாயாமாக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது .

இருந்த போதிலும் ஆதார் அனைத்திற்கும் கட்டாயமாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், எஸ்.கே.கவுல், சந்த்ராசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, ஆதார் கட்டாயமாக்கக்கூடாது என கண்டிப்பாக தெரிவித்துள்ளது .