Asianet News TamilAsianet News Tamil

இனி 2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம்! கேஷ் ஆன் டெலிவரிக்கு புதிய கன்டிஷன் போடும் அமேசான்!

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப் படாது என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Amazon Wont Accept 2,000 rupees notes on Delivery Of Orders From This Date sgb
Author
First Published Sep 14, 2023, 2:21 PM IST | Last Updated Sep 14, 2023, 2:36 PM IST

ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செப்டம்பர் 19 முதல் டெலிவரி சேவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துகிறது. 2,000 ரூபாய் நோட்டை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவரும் நேரத்தில் இந்த அப்டேட் வந்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செய்வதற்காக ஆர்பிஐ வழங்கிய அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிகிறது.

“அமேசான் தற்போது 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், செப்டம்பர் 19, 2023 முதல், அமேசானில் ஆர்டர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி (COD) முறையில் பணம் செலுத்தும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 நாட்கள் அவகாசம்... மீறினால் தினமும் ரூ.5,000 அபராதம்... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

Amazon Wont Accept 2,000 rupees notes on Delivery Of Orders From This Date sgb

மே மாதம், இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்று காலக்கெடு அளித்துள்ளது. தேவைப்பட்டால் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது கிரிமினல் குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே இரவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவற்றுக்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகள் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன.

மே 19ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் ஏற்கனவே வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக செப்டம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 31 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி என்றும் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன; மீதமுள்ள 13 சதவீதம் வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று பல்வேறு வங்கிகளின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

ஐபோன் 15 ரிலீஸ் ஆனதும் பழைய மாடல்களின் விலையைக் குறைத்த ஆப்பிள் நிறுவனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios