Asianet News TamilAsianet News Tamil

ஏர்பஸ் உடன் இந்திய ரயில்வே ஒப்பந்தம்: 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

ஏர் பஸ் உடன் இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Airbus and Indian Railways Gati Shakti Vishawavidyalaya sign MoU smp
Author
First Published Sep 8, 2023, 2:49 PM IST

இந்திய ரயில்வேயின் கதி சக்தி விஸ்வவித்யாலயா (ஜிஎஸ்வி) வதோதரா மற்றும் வணிக விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் ஆகியவை இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதி சக்தி விஸ்வவித்யாலயா (ஜிஎஸ்வி) வதோதரா நிறுவனம் 2022 இல் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. 

டெல்லியில் உள்ள ரயில் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரெமி மைலார்ட் மற்றும் இந்திய ரயில்வேயின் கதி சக்தி விஸ்வவித்யாலயாவின் துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் சௌத்ரி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஏர்பஸ்ஸின் இந்திய செயல்பாடுகள் மட்டும் சுமார் 15,000 மாணவர்களை இந்த முயற்சியின் மூலம் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

குஜராத்தின் வதோதராவில் அதிநவீன C295 விமான வசதியை நிறுவுவதற்கான ஏர்பஸ் மற்றும் டாடாவின் சமீபத்திய அறிவிப்பின் அடிப்படையில் இந்த கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டு முயற்சியானது, விண்வெளித் துறையில் புதுமை, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிகிறது.

ஜி20 உச்சி மாநாடு.. டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு.. எதற்கெல்லாம் தடை.? முழு விபரம் இதோ !!

“வேகமாக வளர்ந்து வரும் விண்வெளித் துறைக்கு சேவை செய்ய எதிர்காலத்தில் தயாராக இருக்கும் வகையில், நாட்டில் திறமையான பணியாளர்களை கதி சக்தி விஸ்வவித்யாலயாவுடனான இந்த கூட்டாண்மை உருவாக்கும்.” என ஏர்பஸ் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தீவிர தொழில்-கல்வி கூட்டாண்மைக்கான ஜிஎஸ்வியின் உறுதிப்பாட்டை ரயில்வே அமைச்சர் எடுத்துரைத்தார். அனைத்து படிப்புகளும் தொழில்துறை உள்ளீட்டுடன் இணைந்து வடிவமைக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளால் தேடப்படும் தொழில்துறைக்கு தயாரான பட்டதாரிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த நோக்கத்தை அடைவதற்கு ஏர்பஸ் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்  உதவும் என பாராட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios