நண்பேன்டா.. பீச்சில் ஜாலியாக விளையாடும் எலான் மஸ்க் & மார்க் ஜுக்கர்பெர்க் - AI-யின் கூல் போட்டோஸ்
AI-உருவாக்கிய எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரின் படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை ஜூலை 6 அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இருவருக்குமிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒரு படத்தில், எலோன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் கடற்கரையில் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடுவதைக் காணலாம். மற்றொன்றில் அவர்கள் இயற்கையான கடற்கரை பின்னணியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதைக் காணலாம். ட்விட்டர் பயனர் ஒருவர், சர் டோக் ஆஃப் தி காயின், AI உருவாக்கிய படங்களை சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடற்கரை விடுமுறையில் ஒரு ஜோடியின் போட்டோஷூட் போல தோற்றமளிக்கும் படங்களில், இரண்டு கோடீஸ்வரர்கள் சாதாரண உடைகள் - டி-ஷர்ட்கள் மற்றும் டெனிம்களை அணிந்துள்ளனர். ஒரு படத்தில் அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் ஓடுவதைக் காணலாம்.
பகிரப்பட்டதிலிருந்து, இந்த இடுகை ஏழு மில்லியன் பார்வைகளையும் 1.3 லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவரும் ஆன எலான் மஸ்க், இந்தப் பதிவிற்கு சிரிக்கும் ஈமோஜியுடன் பதிலளித்தனர். "உண்மையில் அவர்கள் மீம்ஸ்களுக்காக இப்படி ஒரு போட்டோஷூட் செய்ய வேண்டும்" என்று ஒரு நபர் கூறினார்.
"இது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்," என்று மற்றொரு பயனர் கூறினார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, பொதுமக்களின் லைக்குகளையும் அள்ளி வருகிறது.
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ