கம்பெனியின் வளர்ச்சிக்கு பாடுபட்டால் கார் பரிசு! ஊழியர்களை ஊக்குவிக்கும் ஐ.டி. நிறுவனம்
தனியார் நிறுவனம் நீண்டகாலமாக பணியாற்றிவரும் 13 ஊழியர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பங்கை பாராட்டும் வகையில் இந்தப் பரிசை அளித்திருக்கிறது.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஐ.டி. நிறுவனம் ஒன்று நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
திரிதியா டெக் என்ற தனியார் நிறுவனம் நீண்டகாலமாக பணியாற்றிவரும் 13 ஊழியர்களுக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பங்கை பாராட்டும் வகையில் இந்தப் பரிசை அளித்திருக்கிறது.
பரிசு பெற்ற ஊழியர்கள் அனைவரும் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து கடின உழைப்பைச் செலுத்தி வந்தவர்கள் என்றும் அந்த நிறுவனம் பாராட்டியுள்ளது.
Adani FPO: அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் மர்னாட் கூறுகையில், “உழைப்பை அங்கீகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்குகிறோம். லாபத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
பரிசு பெற்ற ஊழியர் ஒருவர் பேசியபோது, “கடின உழைப்பிற்காக பாராட்டப்படுவதும் அதற்கான பலனைப் பெறுவதும் மகிழ்ச்சியானதுதான். ஆனால் ஒரு காரை பரிசாகப் பெறுவது முற்றிலும் புதுமையானதாக உள்ளது. எங்கள் நிறுவனம் பணியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டத் தவறுவதில்லை.” என்று குறிப்பிட்டார்.