ADHAR is mudt for post office too
“போஸ்ட் ஆபிஸிலும்” இனி ஆதார் கட்டாயம்...!
ஆதார் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது .
இந்நிலையில்,சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,போஸ்ட் ஆபிஸ் மற்றும் அரசு திட்டங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு ஆதார் எண் இணைக்க வேண்டும்.
இது குறித்து மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், போஸ்ட் ஆபிஸ், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் புரோவிடண்ட் போன்றவற்றில் சேமிப்பு கணக்கை வைக்க முடியும். இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிபாக ஆதார் இணைக்க வேண்டும் என்றும், ஒரு வேளை ஆதார் இல்லை என்றால்,ஆதார் பெறுவதற்கான சமர்ப்பித்த விண்ணப்ப நகலை சமர்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
