Asianet News TamilAsianet News Tamil

adani vs mukesh ambani: அம்பானியை பீட் செய்த அதானி: அதிவேக சொத்து மதிப்பு உயர்வு

adani vs mukesh ambani: 2022ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்களில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 88 சதவீதம் அதிகரித்து, ரூ17.60 ட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

adani vs mukesh ambani:  Adani Group fastest in valuation growth at 88%, Ambani's RIL up 13%: Report
Author
New Delhi, First Published Jun 16, 2022, 11:37 AM IST

2022ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்களில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 88 சதவீதம் அதிகரித்து, ரூ17.60 ட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த 6 மாத காலத்தில் 13.40 சதவீதம் உயர்ந்து, ரூ.18.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆய்வை ஆக்சிஸ் வங்கியின் பர்ஹண்டி ப்ரைவேட் ஹருன் இந்தியா500  என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

adani vs mukesh ambani:  Adani Group fastest in valuation growth at 88%, Ambani's RIL up 13%: Report

குஜாராத்தைச் சேர்ந்த கவுதம் அதானியின், அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த 6 மாதங்களில் அதிகரி்க்க முக்கியக் காரணம் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் வளர்ச்சிதான். இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களில் 139 சதவீதம் வளர்ந்து, ரூ.4.50 லட்சம் கோடி மதிப்புடன் உயர்ந்துள்ளது. 16-வது இடத்திலிருந்த அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம், 6-வது இடத்துக்கு உயர்ந்தது

அதானி வில்மர் நிறுவனம் 190 சதவீதம் உயர்ந்து, ரூ.66,427 கோடியாகவும், அதானி பவர் நிறுவனம் 157 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.66,185 கோடியாகவும் அதிகரி்த்துள்ளது. அதானி குழுமத்தில் உள்ள 9 நிறுவனங்கள் சேர்ந்து 88.1 சதவீதம் வளர்ச்சி அடைந்து, மதிப்பின் அடிப்படையில் ரூ.17.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. 500 நிறுவனங்களில் அதானி குழுமம் மட்டும் 7.6 சதவீதத்தைப் பெற்றுள்ளன. 

adani vs mukesh ambani:  Adani Group fastest in valuation growth at 88%, Ambani's RIL up 13%: Report

500 நிறுவனங்களும் சராசரியாக 2 சதவீதம் அதாவது ரூ.221 லட்சம் கோடியிலிருந்து ரூ.232 லட்சம் கோடியாக வளர்ந்தநிலையில் அதானி குழுமம் மட்டும் 88 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.  

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த 6 மாத காலத்தில் 13.40 சதவீதம் உயர்ந்து, ரூ.18.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

தேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் சீரம் இந்தியா நிறுவனத்தின் மதிப்பு 4.6 சதவீதம் சரிந்து, ரூ.1.75 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.  பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு 24.7சதவீதம் அதிகரித்து, ரூ.1.68 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. 

adani vs mukesh ambani:  Adani Group fastest in valuation growth at 88%, Ambani's RIL up 13%: Report

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் மதிப்பு 17.9 சதவீதம் சரிந்து, மதிப்பு ரூ.23ஆயிரம் கோடியாககுறைந்துள்ளது.34-வது இடத்தில் இருந்த பதஞ்சலி 184வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வங்கித்துறையில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மதிப்பு சரிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி மதிப்பு 3.9சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி மதிப்பு 15 சதவீதமும் குறைந்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios