adani share price :  ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 900 கோடி டாலர்(ரூ.68,499 கோடி) அதிகரித்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 900 கோடி டாலர்(ரூ.68,499 கோடி) அதிகரித்துள்ளது.

6-வது கோடீஸ்வரர், கூகுள் நிறுவனரை முந்தினார்

மென்பொருள் துறையில் கோடீஸ்வரரான லாரி எலிஸனை முந்திய அதானி, உலகிலேயே 6-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அதானின் சொத்து மதிப்பு தற்போது கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பெரினைவிட அதிகரித்துள்ளது.

அம்பானியை முந்தினார்

போர்ப்ஸ் ரியல்டைம் பில்லியனர் இன்டெக்ஸ் குறிப்பின்படி, “ அதானியின் சொத்துமதிப்பு 11ம்தேதி நிலவரப்படி, பங்குச்சந்தையில் அவர் நிறுவனத்தின் பங்குகளின் உயர்வால் 12190 கோடிக்கு உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பை விட 2200 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 

கடந்த இரு வாரங்களாக முகேஷ் அம்பானியின் நிறுவனங்களின் பங்குகளுக்கும், அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு நிறுவனங்களின் பங்குகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

அதானி க்ரீன் நிறுவனம்

அதானி குழுமத்தில் உள்ள அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்ததன்விளைவுதான் அதானிக்கு 900 கோடி டாலர் கூடுதலாக சொத்து சேர்ந்தது. மும்பைப் பங்குச்சந்தையின் முடிவில் அதானி க்ரீன் எனர்ஜியின் ஒரு பங்கு மதிப்பு ரூ.2,788ஆக அதிகரித்தது. பங்குச்சந்தையில் டாப்10 மதிப்பு மிக்க பட்டியலிலும் க்ரீன் எனர்ஜி இடம் பிடித்தது. 

அந்நிய முதலீடு

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மதிப்பைவிட அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் சொத்து நேற்றைய வர்த்தக்தில் அதிகரி்த்து, ரூ.4.22 லட்சம் கோடியாகஉயர்ந்தது. அதானி க்ரீன் எனர்ஜியின் பங்குகளும் கடந்த 2 நாட்களில் 29 சதவீதம் வளர்ச்சி அடைந்தன.

அதானி குழுமத்தில் உள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தைச்சேர்ந்த இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி 200 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கிறது இதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன