Fuel Price rise: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை வரும் 12ம் தேதிக்குள் எந்த அளவு உயர்த்தினால், எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்கும் என்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை வரும் 12ம் தேதிக்குள் எந்த அளவு உயர்த்தினால், எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்கும் என்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததையடுத்து, கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ஆனால், உக்ரைன் ரஷ்யப் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும்வகையில் அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 டாலராகவும், அமெரிக்க டெக்சாஸ் சந்தையில் பேரல் 111 டாலருக்கும் உயர்ந்தது. இதனால், உற்பத்திக்கும், சில்லரை விற்பனைக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து கொண்டெ செல்கிறது.

இந்நிலையில் வரும் 7 ம்ததேதியோடு 5 மாநிலத் தேர்தல் முடிகிறது. ஆதலால், வரும் 8ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைஉயர்வை எதிர்பார்க்கலாம். இந்தவிலை உயர்வு எவ்வாறு இருக்கும், நாள்தோறும் எவ்வளவு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும் என்பது தெரியவில்லை

இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் “ கடந்த 4 மாதங்களாக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. கடந்த 2 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை கடுமையாகஉயர்ந்த போதிலும்கூட பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு இப்போதே இருந்து வருகிறது. அதாவது, மார்ச் 3-ம் தேதிவரை எண்ணெய் நிறுவனங்ளுக்கு இழப்பு பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4.92 இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மார்ச் 10ம் தேதிக்குள் லிட்டருக்கு ரூ.10.1 ஆகவும், ஏப்ரல் 1-ம் தேதிக்குள் லிட்டருக்கு ரூ.12 ஆகவும் அதிகரிக்கலாம்.

ஆதலால், வரும் 16ம் தேதிக்குள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தினால்தான் இழப்பிலிரு்து தப்பிக்க முடியும். இந்த 12ரூபாய் என்பது எண்ணெய் நிறுவனங்கள் இழப்பிலிருந்து தப்பிக்க மட்டுமே, லாபம் அடைய அல்ல. ரூ.12 உயர்த்தப்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் செலவும், வருவாயும் சமமாகும். இழப்பு ஏற்படாது. ஆனால், லாபம் அடைய லிட்டருக்கு ரூ.15.10 வரை உயர்த்தப்பட வேண்டியது அவசியமாகும்.

பெட்ரோல், டீசல்விலை உயர்வை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தும்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 81.5 டாலராக இருந்தது. ஆனால், தற்போது இந்தியா ஒரு பேரலை 117.39 டாலருக்கு விலை கொடுத்து வாங்குகிறது என்று மத்திய பெட்ரோலியம் திட்டம் மற்றும் ஆய்வுக்குழு தெரிவிக்கிறது. ஆதலால் பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தினால் மட்டும்தான் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பிலிருந்துதப்பிக்கஇயலும்” எனத் தெரிவித்துள்ளது