85k gifted for girls in soorath

ஒன்றுக்கும் அதிகமான பெண் குழந்தைகள் உள்ள 5௦ ஆயிரம் குடும்பங்களுக்கு வித்யாலக்ஷ்மி யோஜா என்ற திட்டத்தின்படி, தலா ரூ.85 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அற்புத ஏற்பாட்டை, சூரத் வைர சங்கத்தின் சுகாதாரக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த திட்டமானது பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நோக்கில், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்பதற்காகவும், வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.

இதற்கு முன்னதாக மத்திய அரசு, கடந்த 2௦15 ஆம் ஆண்டு, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம் என்ற நம் திட்டத்தை அறிமுகம் செய்தது

சூரத்தை பொறுத்தவரை, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்களை தொழிலதிபர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று, வைர வியாபாரி லக்ஷிதாஸ் வெக்காரியா சிறப்பாக பணியாற்றிய 125 ஊழியர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா 4 ஜி ஸ்கூட்டரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

இதிலிருந்து சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு தகுந்த சன்மானமாக அவர்களை கெளரவிக்கும் பொருட்டு பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றனர் வைர வியாபாரிகள்