தீபாவளி போனஸ்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்.. அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா?
அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பாசிட்டிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது வெளியாகும்?
நவராத்திரி, தீபாவளி என பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு இடையே டிஏ உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 4 சதவீத உயர்வு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
DA Hike : அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக உயரும் அகவிலைப்படி.. எவ்வளவு தெரியுமா?
தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்வு இருக்கும் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதைப் போலவே, இந்த முறையும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது டிஏ உயர்வு, எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 1, 2023 முதல் 7வது ஊதியக் குழு விதிகளின் கீழ் அமலுக்கு வரும்.
தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். இந்த நிலையில் இம்முறை 4% உயர்வு இருக்கும் என்பதால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46%ஆக உயரும். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.