70 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.......ஆய்வில் திடுக்கிடும் தகவல்....!!!

இந்தியாவில் கடந்த நான்கு வருடமாக ஒரு நாளைக்கு 550 வேலை இழப்புகள் ஏற்படுவதாக சிவில் சமூக அமைப்பான பிரஹார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் நாட்டில் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2013-ம் ஆண்டு 4.19 லட்சம் வேலை வாய்ப்புகளும் 2011-ம் ஆண்டு 9 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகி இருந்தது.ஆனால் 2015-ம் ஆண்டு 1.35 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 550 வேலை இழப்பதாக தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் தகவல் படி இந்தியாவில் வேளாண்மைத் துறை 1994-ம் ஆண்டு 60 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால் இது 2013-ம் ஆண்டு 50 சதவீதமாக குறைந் துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபு ரியும் தொழிலாளர்களின் எண் ணிக்கை பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கடந்த மாதம் பிப்ரவரி மாதம் நடந்த மேக் இன் இந்தியா வாரத் தில் அறிவிக்கப்பட்டது. இருப்பி னும் இந்த முதலீடு 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக் குமா என்பது சந்தேகமே.......!!

 விவசாயம், முறைசாராத ரீடெய்ல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. இந்த துறைகளை நம்பித்தான் 99 சதவீத மக்கள் இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருகிறார்கள் என்பது உண்மை.

இந்நிலையில், இந்தியாவில் விவசாயம் ,சிறு குறு தொழில்கள் என அனைத்திலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.