உஷார் மக்களே....!! 6 லட்சம் டெபிட்கார்டு முடக்கம் ....எஸ்பிஐ அதிரடி நடவடிக்கை ...!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மிக பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, வங்கியின் ஏடிஎம் சேவையை பயன்படுத்தி மர்மமான முறையில் வாடிக்கையாளர் விவரங்கள் திருடப்பட்டுள்ளதால், மிகப்பெரிய ஏடிஎம் திருட்டுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புள்ளதாக, எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

அதாவது, எஸ்பி ஐ வங்கியானது, ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு சில தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, சில விஷமிகள் ரகசிய மென்பொருள் மூலமாக, ஊடுருவி, வங்கியின் பயனாளர் தொடர்பான ஏடிஎம் விவரங்களை ததிருடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, மிக பெரிய அளவில், ஏடிஎம் கொள்ளை நடைபெற வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட சில ATM கார்டுகளை முடக்கியுள்ளதாக எஸ் பி ஐ தெரிவித்துள்ளது.

மேலும், டெபிட் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகாமையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல் ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான புதிய டெபிட் கார்டை விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என எஸ்பியை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாத நிலவரப்படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் சார்பாக, நாடு முழுவதும் 4.75 கோடி டெபிட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.