தனிநபர் 50 கோடிக்கு இன்சூரன்ஸ் ..!!! பின்னணியில் கருப்பு பணமா...???

பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், நாடே மிகவும் அவதி பட்டு வருகிறது.

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், எதில் முதலீடு செய்வது, எப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது என ரூம் போட்டு யோசிக்கும் தருணமாக மாற்றியுள்ளது மோடியின் அதிரடி அறிவிப்பு ....

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், ஜீவன் அக்ஷய் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ரூ.50 கோடிக்கு பிரிமீயம் கட்டி, இன்சூரன்ஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவரத்தை எல்ஐசி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் .இருந்தபோதிலும் இந்த நபர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.