மோசமான  சேவை  வழங்குவதில் மூன்றாம்  இடம்  பிடித்த ஏர் இந்தியா “.....!!

சர்வதேச  அளவில் விமான சேவைகள்  எந்த அளவிற்கு  சிறப்பாக  செயல்படுத்தபட்டுள்ளது  என, பிளைட்ஸ்டாட்ஸ் நிறுவனம்  ஆய்வு  செய்துள்ளது. மேலும்  எந்தெந்த விமான   நிறுவனங்கள் சிறப்பாக  செயல்பட்டது என்றும், அதே சமயத்தில்  எந்தெந்த விமான  நிறுவனங்களின்  செயல்பாடு  மோசமாக   இருந்ததென்றும்  ஆய்வு செய்யப்பட்டது  கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எதை  பொருத்து சேவையை  தீர்மானிக்கப்பட்டது?

விமான  சேவையை திடீரென  ரத்து செய்வது

கால  தாமதமாக  சேவை வழங்கியது  உள்ளிட்ட வெவ்வேறு 500  காரணிகளை  வைத்து,  எந்த  நிறுவனம் சேவையை  நன்கு  வழங்குகிறது, எந்த நிறுவனம்  சேவையில் தொய்வு  அடைந்துள்ளது   என   தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதே  சமயத்தில், மிகச் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் பட்டியலில் கேஎல்எம் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த  அறிக்கையை, பிளைட்ஸ்டாட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ஜிம் ஹெட்செல் தெரிவித்துள்ளார்