வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! சேவைகள் குறைப்பு, கட்டணம் உயர்வு! எந்த வங்கி?
2026-ல் வங்கிகள் மற்றும் வாலெட் செயலிகள் தங்களது சேவை விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளன. இதனை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

வங்கி சேவை கட்டணம்
வங்கி சேவைகளுக்கான கட்டணங்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், வருகிற ஆண்டில் மேலும் பல சேவைகள் குறைக்கப்பட வேண்டும், புதிய கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும். ஏடிஎம் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, செக் புத்தகம் போன்ற சேவைகளுக்கு ஏற்கனவே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2026ல் வங்கிகள் மற்றும் வாலெட் செயலிகள் தங்களது சேவை விதிமுறைகளுக்கு முக்கிய மாற்றங்களை கொண்டு வர தயாராக உள்ளன.
வங்கி வாடிக்கையாளர்
இந்த மாற்றங்களில் முக்கியமாக, ஐசிஐசிஐ வங்கி தனது பல சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 15 முதல், ஆன்லைன் கேமிங் தளங்களில் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் தொகைக்கு 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமேசான், Paytm, Mobikwik போன்ற மூன்றாம் தரப்பு வாலெட்களுக்கு ரூ.5,000ஐ மீறும் பணப் பரிமாற்றங்களுக்கு 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும். வங்கி கிளையில் கிரெடிட் கார்டு பில்லை பணமாக செலுத்தினால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இன்ஸ்டன்ட் பிளாட்டினம் கார்டுக்கு சலுகை வழங்கப்பட்ட BookMyShow இலவச திரைப்பட சேவை 2026 பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுகிறது.
வங்கி சேவை குறைப்பு
பிற கார்டுகளுக்கு இலவச திரைப்பட சலுகை பெற, முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.25,000 செலவு செய்ய வேண்டும். Rubix, Sapphiro கார்டுகளில் மாதம் ரூ.20,000 செலவு செய்தால் மட்டுமே ரிவார்டு பாய்ண்ட்ஸ் கிடைக்கும். பிளாட்டினம், கோரல் கார்டுகளில் போக்குவரத்து செலவு வரம்பு மாதம் ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், Airtel Payments Bank தனது வாலெட் வாடிக்கையாளர்களிடம் 2026 ஜனவரி 1 முதல் ஆண்டுக்கு ரூ.75 (GST கூடுதல்) பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வங்கி விதிமுறை மாற்றம்
கணக்கில் போதுமான இருப்பு இல்லையெனில், அடுத்த டெபாசிட்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். முன்பு இலவசமாக இருந்த வாலெட் சேவைகள், தற்போது செயலற்ற கணக்குகளுக்கு கட்டணம் விதிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. மேலும், KYC பூர்த்தி செய்யாத வாடிக்கையாளர்களுக்கு காலாண்டுக்கு ரூ.5 அபராதம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாலெட் ரீசார்ஜ் செய்தால் 1.5 சதவீத சேவை கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

