சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் தரும் பட்ஜெட். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Budget 2024 LIVE: மத்திய பட்ஜெட் 2024! தங்கம், செல்போன் விலை குறைகிறது!

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுகிறது. செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்
Budget 2024 | பட்ஜெட் 2024-25 எதிரொலி! விலை குறையும் & அதிகரிக்கும் பொருட்கள்! முழு பட்டியல் இதோ!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டிற்கான தனது 7வதுமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்கள் நுகர்வோருக்கு மலிவாகவும், விலை அதிகரித்தும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அவை எந்தெந்த பொருட்கள் என இங்கு காணலாம். மேலும் படிக்க
தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய உறுதுணையாக இருந்த பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகளை மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும் படிக்க
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜக படித்துள்ளது - ப.சிதம்பரம்
தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜக படித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 11ம் பக்கத்தில் உள்ள அம்சம் மத்திய பட்ஜெட்டிலும், 30ம் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்தவித, சிறப்பு திட்டங்களோ, நிதியோ ஒதுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள தடுப்பு பணிகளுக்காக கோரப்பட்ட நிதி கூட ஒதுக்கப்படவில்லை.
5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மாஸ் அறிவிப்பு
பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் 63,000 உள்ளடக்கிய பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலை உயர்த்தப்படும். இதனால் 5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதிய வரி விதிப்பு முறையில் சதவிகிதம் மாற்றம்
புதிய வரி விதிப்பு முறையில் 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் வரை வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவிகிதமும், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவிகிதமும், 10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை
மூன்றில் இரு பங்கினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை.
செல்போனுக்கான சுங்கவரி குறைப்பு!
செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதியமைச்சர்அதாவது இவற்றின் மீதான சுங்க வரி 15 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது.
தங்கம் விலை குறைகிறது... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சோலர் பேனல்... 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம்
சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும், சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.
புற்றுநோய் தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!
புற்று நோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும்
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
மூலதன செலவுக்காக ரூ. 11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு
2024-25 நிதியாண்டுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான நிதி ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக வரும் ரூ.11.11 லட்சம் கோடி மூலதனச் செலவீனமாக வெளியிடப்படும் என்றும் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
பீகாருக்கு ரூ.21,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு.
மத்திய பட்ஜெட் 2024: பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக எம்.பிக்கள் அமளி
பீகார் வெள்ள தடுப்பு பணிக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்.. நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு!
சிறு குறு தொழில்களுக்கான(MSME) காலக் கடன்களை எளிதாக்கும் நோக்கில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயங்களைக் குறைக்கும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சுயநிதி உத்தரவாத நிதி மூலம் ரூ. 100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.