Budget 2024 | பட்ஜெட் 2024-25 எதிரொலி! விலை குறையும் & அதிகரிக்கும் பொருட்கள்! முழு பட்டியல் இதோ!
Budget 2024 cheaper and costlier list | BJP தலைமையிலான NDA அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டிற்கான தனது 7வதுமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்கள் நுகர்வோருக்கு மலிவாகவும், விலை அதிகரித்தும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அவை எந்தெந்த பொருட்கள் என இங்கு காணலாம்.
2023 ஆண்டு பட்ஜெட்டின் போது, இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில் கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான அத்தியாவசிய கூறுகளான லித்தியம்-அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதத்தையும் நிதி அமைச்சர் குறைத்துள்ளார். இந்த கொள்கை மாற்றமானது, நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதை அதிகரித்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறையும் பொருட்களின் பட்டியல் இதோ!
- மொபைல் போன்கள், மொபைல் சார்ஜர்கள் மீதான வரி 15% சதவீதமாகக் குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% சதவீதமாகவும், பிளாட்டினத்தின் மீது 6.4% சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியலை விரிவுபடுத்தவும் பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இ-காமர்ஸ் மீதான TDS விகிதம் 1% சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.
மொபைல் போன்கள் விலை குறைகிறது.. பட்ஜெட்டில் வெளியான மஜாவான அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
விலை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியல் இதோ!
- அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10% சதவீதமாகவும்,
- மக்காத பிளாஸ்டிக்குகளுக்கு 25% சதவீதமாகவும் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?