மகளிர் உரிமைத்தொகை : பட்ஜெட்டில் குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2024-25 rs 13,720 crores allocated for kalaignar magalir urimai thogai scheme Rya

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன்படி பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளீயிட்டுள்ளார். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

2024-25 தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் :

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு. புதுமைப் பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

பள்ளி கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.6,720 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சாலைகளை விரிவுப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் ரூ.500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.

தமிழ்நாட்டில் ரூ.1000 கோடியில் 2000 கி.மீக்கு சாலைகள் அமைக்க திட்டம்

5 லட்சம் ஏழைக்குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ25,000 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

மதுரை, சேலத்திடலும் தடையற்ற குடிநீர் விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன்படி பல்வேறு புதிய அறிவிப்புகளையும் அவர் வெளீயிட்டுள்ளார். குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

2024-25 தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் :

  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு. புதுமைப் பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
  • பள்ளி கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.6,720 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாநகராட்சி சாலைகளை விரிவுப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் ரூ.500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் தூர்வாரப்படும்.
  • தமிழ்நாட்டில் ரூ.1000 கோடியில் 2000 கி.மீக்கு சாலைகள் அமைக்க திட்டம்
  • 5 லட்சம் ஏழைக்குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ25,000 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • மதுரை, சேலத்திடலும் தடையற்ற குடிநீர் விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios