மானியச் செலவு 1.47 லட்சம் கோடி உயர்வு... காரணம் என்ன? தமிழக பட்ஜெட்டில் விளக்கம்
2024-25 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மானியச் செலவு ரூ.1.47 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
2024-25 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மானியச் செலவு ரூ.1.47 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படுவது, பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்ட விரிவாக்கம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.1000 ஊக்கத்தொகை ஆகியவற்றால் இந்தச் செலவு அதிகரித்துள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 2023-25 நிதி ஆண்டில் ரூ.4.03 லட்சம் கோடி மானியங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது ரூ.50 ஆயிரம் கோடி அதிகரித்து, ரூ.4.53 லட்சம் கோடியாகும் என எதிர்பார்ப்பதாவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இலவச Wifi.. 500 புதிய மின் பேருந்துகள்- தமிழக பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு
இந்நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில புதிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 500 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க ரூ.360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டு முழுவதும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க ரூ.13,270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் மாநிலத்தின் மானியச் செலவுகள் அதிகரித்துள்ளது என அமைச்சர் தங்கபம் தென்னரசு எடுத்துரைத்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை : பட்ஜெட்டில் குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..