நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய பட்ஜெட்டை  நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.

Rahul Gandhi slams Union Budget 2024 Says it is copy paste of congress manifesto Rya

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உற்பத்தி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 துறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த விட மாற்றமும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. 

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று திட்டங்களை அரசாங்கம் தொடங்கும் என்று அறிவித்தார். இந்தத் திட்டங்கள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) சேரும் அடிப்படையில் இருக்கும் என்று மக்களவையில் சீதாராமன் தெரிவித்தார். மேலும் 1 கோடி இளைஞர்கள் பணி அனுபவம் பெறும் வகையில் உதவித்தொகையுடன் கூடிய இண்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். 

மத்திய பட்ஜெட் 2024: ஆந்திரா, பீகாருக்கு அடித்த ஜாக்பாட்! கோடி கோடியாக வாரி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ 2024 மத்திய பட்ஜெட் பாஜகவின் கூட்டாளிகளை சமாதானப்படுத்துகிறது. சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து முந்தையை பட்ஜெட்களில் இருந்தும் அப்படி காப்பியடிக்கப்பட்ட பட்ஜெட்” என்று விமர்சித்துள்ளார். குறிப்பாக ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டி இதை தெரிவித்துள்ளார்

 

பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தான் மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைய உறுதுணையாக இருந்தன. இந்த நிலையில் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களும் இந்த பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமோ அல்லது நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் 2024 சிறப்பம்சங்கள் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios