தமிழ்நாடு பட்ஜெட் 2024: திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழக பட்ஜெட் உரையின்போது திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புகழ்ந்து பேசினார்
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து வருகிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் தாக்கல் செய்து வரும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
அப்போது பேசிய அவர், திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். ‘காட்சி கெளியன் கடுஞ்சொல்லான் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளை கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி தனது பட்ஜெட் உரையை தங்கம் தென்னரசு தொடங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்த அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என்றார்.
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும் எனவும், ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும், கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும், சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்தார்.
Tamil Nadu Budget 2024 LIVE Updates...
கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனவும், கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும் எனவும் தங்கம்ன் தென்னரசு அறிவித்தார்.
தமிழக அரசின் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் வருகிற 22ஆம் தேதி பதில் அளிக்கின்றனர்.