Toyota Innova: எத்தனால் மூலம் இயங்கும் உலகின் முதல் BS6 கார்! அறிமுகம் செய்தார் அமைச்சர் நிதின் கட்கரி !

கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனைத்தும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் என்பதே எனது கனவு என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

World's 1st BS6 Hybrid, Ethanol-powered Toyota Innova unveiled by Nitin Gadkari sgb

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டொயோட்டா இன்னோவா எம்பிவி (Toyota Innova MPV) காரின் பெட்ரோல் பயன்பாடு இல்லாத, எத்தனாலால் மூலம் இயங்கும், ஹைப்ரிட் மாடலை இன்று வெளியிட்டார்.

எத்தானால் ஹைபிரிட் இன்னோவா கார் வழக்கமான பெட்ரோல் மாடலைப் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அதில் 100% எத்தனால் எரிபொருளை நிரப்பி இயக்கும் வகையில் 2.0 லிட்டர் ஃப்ளெக்ஸ் எரிபொருளுக்கான ஹைப்ரிட் எஞ்சின் இருக்கிறது.

வெளியீட்டு நிகழ்வில் பேசிய கட்காரி, "திறன் வாய்ந்த எத்தனால் உற்பத்தியாளர்களின் மூலம்  மூன்று மாதங்களுக்குள் இந்தியா 20% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டு இலக்கை எட்ட முடியும். எத்தனால் உற்பத்தியில் உலகின் நம்பர் 1 உற்பத்தியாளராகவும் இந்தியா மாற முடியும்" எனக் கூறினார்.

கார்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனைத்தும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் என்பதே எனது கனவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Toyota Rumion: டொயோட்டாவின் புதிய ரூமியன் காருக்கு முன்பதிவு ஆரம்பம்! ரூ.10.29 லட்சம் முதல் விற்பனை

World's 1st BS6 Hybrid, Ethanol-powered Toyota Innova unveiled by Nitin Gadkari sgb

எத்தனால் எரிபொருள்:

எத்தனால் என்பது கரும்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் பார்லி போன்ற விவசாய கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். மற்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது எத்தனால் ஒரு செலவு குறைந்த எரிபொருளாகும். மேலும் சுற்றுப்புற காற்றில் கணிசமாக, குறைவான டெயில்பைப் நச்சுகளை வெளியிடுகிறது.

விவசாயக் கழிவுகள் தவிர, இதர தாவரக் கழிவுகளில் இருந்தும் 2G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க முடியும். இதற்கான மிகப்பெரிய ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது.

பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் அதிக ஆக்டேன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. காரின் சக்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் எரிபொருளின் விலையும் குறைவாக இருக்கிறது.

22 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகை! இதுதான் புருனே சுல்தான் குடியிருக்கும் உலகின் மிகப்பெரிய வீடு!

World's 1st BS6 Hybrid, Ethanol-powered Toyota Innova unveiled by Nitin Gadkari sgb

ஃப்ளெக்ஸ் எரிபொருள் என்றால் என்ன?

ஒரு வாகனத்தின் இயந்திரத்தை பெட்ரோல் / பெட்ரோலில் 20%க்கும் அதிகமான எத்தனால் கலந்து பயன்படுத்துவது ஃப்ளெக்ஸ் எரிபொருள் தொழில்நுட்பம் என்று சொல்லப்படுகிறது. தற்போது, பிரேசில் 48 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் நாடாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல OEMகள் தங்கள் வாகனங்களை E20 எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியுள்ளன. 2025ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருளை பயன்பாட்டை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே E20 எரிபொருள் நாடு முழுவதும் 3,300 இடங்களில் கிடைக்கிறது.

சமீப காலங்களில், இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு 2013-14 இல் 1.53% ஆக இருந்து மார்ச் 2023 இல் 11.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி செலவில் 41,500 கோடி ரூபாய் குறைய வழிவகுத்துள்ளது.

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனுக்கு எவ்வளவு அருகில் செல்லும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios