Toyota Rumion: டொயோட்டாவின் புதிய ரூமியன் காருக்கு முன்பதிவு ஆரம்பம்! ரூ.10.29 லட்சம் முதல் விற்பனை
டொயோட்டாவின் புதிய ரூமியன் கார் ஏழு வகையான மாடல்களில் கிடைக்கும். இவற்றில் ஆறு மாடல்கள் பெட்ரோல் மூலம் இயங்குபவை. இதன் விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ.13.68 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தோ-ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சமீபத்தில் இந்தியாவில் புதிய மாருதி சுசுகி எர்டிகாவுக்குப் போட்டியாக, ரூமியன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த காரின் விலையை தற்போது அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய டொயோட்டா ரூமியன் எம்பிவி ரூ.10.29 லட்சத்தில் தொடங்கி ரூ.13.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளது. உயரும். பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவில் இயங்கும டிரைவ் டிரெய்னுடன் வழங்கும். கூடுதலாக, இப்போது புக்கிங் செய்தால் டெலிவரி இந்த ஆண்டு செப்டம்பர் 8 முதல் தொடங்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
டொயோட்டா ரூமியன் எம்பிவி 7 வகையான மாடல்களில் கிடைக்கும். இவற்றில் ஆறு மாடல்கள் பெட்ரோல் மூலம் இயங்கும் மாடல்களாக இருக்கும். ஒன்று மட்டும் இயற்கை எரிவாயும் மூலம் இயக்கக்கூடியதாக இருக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். S MT மாடல் காரின் விலை ரூ.10.29 லட்சமாகவும், S AT மாடல் காரின் விலை விலை ரூ. 11.89 லட்சம்.
ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?
இந்த வரிசையில் அடுத்த G மாடலின் விலை ரூ.11.45 லட்சம் ஆகும். V மாடலின் விலை ரூ.12.18 லட்சமாக இருக்கும். இதே V மாடல் கார் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடனும் கிடைக்கிறது. அதன் விலை ரூ.13.68 லட்சம். இதுதான் டொயோட்டா ரூமியன் காரின் மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். கடைசியாக, S மாடலில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் அவசதி இருக்கும். இதன் விலை ரூ.11.24 லட்சம்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, டொயோட்டா ரூமியன் மாருதி சுசுகி எர்டிகா காரைப் போலவே இருக்கிறது. இருப்பினும், மாருதி சுசுகி எர்டிகாவிற்கும் டோயோட்டா ரூமியனுக்கும் வடிவமைப்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. புதிய முன்பக்க பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப் போன்ற தனித்துவமான அம்சங்களும் ரூமியன் காரில் உள்ளன. இந்த காரின் டூயல்-டோன் அலாய் வீல்கள் வித்தியாசமாக உள்ளன.
புத்தம் புதிய டொயோட்டா ரூமியன் 17.78 செமீ டச் ஸ்கிரீன், ஆர்காமிஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. புளூடூத் இணைப்பு, ஆடியோ கால் கட்டுப்பாடுகள், USB இணைப்பு ஆகியவையும் உள்ளன.
ருமியனில் டொயோட்டா ஐ-கனெக்ட் அம்சம் உள்ளது. இது காரின் வெப்பநிலை, கதவுகளை மூடுதல் அல்லது திறத்தல், எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஹெட்லைட்களைக் பயன்படுத்த ரிமோட் கண்ட்ரோல் வாய்ப்புகளை வழங்குகிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஹே சிரி ஸ்பீச் அசிஸ்டெண்ட் ஆகியவற்றை பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
பவர் டிரெய்னைப் பொறுத்தவரை, டொயோட்டா ரூமியன் எர்டிகாவில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் நியோ டிரைவ் (ISG) தொழில்நுட்பத்துடன் வருகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் மாடல் 26.11 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.