பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, தனது மூன்றாவது எலக்ட்ரிக் காரான EX60 மாடலை 2026 ஜனவரி 21 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள XC60 SUV-யின் முழுமையான எலக்ட்ரிக் பதிப்பாகும்.
ஸ்வீடனில் தலைமையகமுள்ள பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் வால்வோ, இந்திய எலக்ட்ரிக் வாகன (EV) சந்தையில் தன் பங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. 2026 ஜனவரி 21 அன்று, வால்வோ தனது மூன்றாவது எலக்ட்ரிக் காரான EX60 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தற்போது விற்பனையில் உள்ள XC60 SUV மாடலின் முழுமையான எலக்ட்ரிக் பதிப்பாகும்.
வோல்வோ EX60, பிரீமியம் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் வரும் வாகனம் என்பதால், இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. EX30 மற்றும் EX90 மாடல்களின் வெற்றிக்குப் பிறகு, வால்வோவின் புதிய EX60 மாடல், அதன் எலக்ட்ரிக் வாகன வரிசையில் இடைநிலை அளவிலான தேர்வாக அமையும். இதன் மூலம், நிறுவனம் இந்தியாவில் தனது EV விற்பனையை அதிகரிக்கவும், பிரீமியம் வாகன பிரிவில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட டீசர் புகைப்படம் பார்த்தால், வால்வோவின் பாரம்பரிய சிக்னேச்சர் ஹெட்லெம்ப் மற்றும் டெயில்லெம்ப் வடிவமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. இது தற்போதைய XC60 ICE மாடலை ஒத்த தோற்றத்தைக் கொண்டாலும், வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சற்று சுருக்கமான, நவீன கிராஸ்ஓவர் வகை வடிவமைப்பு சிறப்பாக இருக்கும்.
வோல்வோவின் எதிர்கால எஸ்யூவி வடிவமைப்புக்கான புதிய திசை EX60 வழியாக தெளிவாக வெளிப்படுகிறது. இதன் ஈரோடினமிக் வடிவமைப்பு, மெல்லிய LED விளக்குகள், மற்றும் புதிய கிரில் அமைப்பு வாகனத்திற்கு ஒரே நேரத்தில் ஸ்டைலிஷ் மற்றும் தொழில்நுட்பமிகு தோற்றத்தை வழங்குகிறது.
உலகளாவிய சந்தைகளுக்காக EX60, ஸ்வீடனின் கோதன்பர்க்கிற்கு அருகிலுள்ள டோர்ஸ்லாண்டா ஆலையில் தயாரிக்கப்படும். ஆனால், இந்தியாவின் முக்கிய வளர்ச்சி சந்தைகளில் வாகனத்தை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யும் திட்டம் வோல்வோவுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது விலையைக் குறைக்கும் வாடிக்கையாளர்களுக்கு போட்டித்தன்மையுடன் வாகனத்தை வழங்க உதவும்.
இன்று வால்வோ EX60-ன் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தேதி பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. வோல்வோ முதலில் இந்தியாவில் EX90 மாடலை அறிமுகப்படுத்தி, அதன் பிறகு EX60-I அசெம்பிள் செய்யும் வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் முன்பே தெரிவித்துள்ளது.
தற்போதைய தகவல்படி, வால்வோ EX60 மாடலின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.67 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்-ரேஞ்ச் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையக்கூடும்.
