ஃபோக்ஸ்வேகன் இந்தியா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 'ஃபாஸ்ட்ஃபெஸ்ட்' சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், டைகுன் மற்றும் விர்டஸ் மாடல்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் விற்பனையை உயர்த்தவும், டீலர்ஷிப்புகளில் கையிருப்புகளை குறைக்கவும், பல கார் நிறுவனங்கள் 2025 டிசம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில், ஜெர்மன் கார் தயாரிப்பாளரான ஃபோக்ஸ்வேகன் இந்தியா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ‘ஃபாஸ்ட்ஃபெஸ்ட்’ (FastFest) சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகைகளின் கீழ், நிறுவனத்தின் பிரபல மாடல்களான டைகுன் மற்றும் விர்டஸ் கார்களுக்கு நாடு ரூ.1.55 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த சலுகைகள் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்பது குறித்து ஃபோக்ஸ்வேகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த ஃபாஸ்ட்ஃபெஸ்ட் சலுகையின் முக்கிய அம்சமாக, டைகுன் மற்றும் விர்டாஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 6 மாத EMI-க்கு சலுகை வழங்கப்படுகிறது. இதனுடன், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். மாடல் மற்றும் வேரியண்ட் அடிப்படையில் மொத்த பலன்கள் ரூ.1.55 லட்சம் வரை செல்லும். துல்லியமான விவரங்களை அறிய, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ள வேண்டும்.
டைகுன் மாடல்களைப் பார்க்கும்போது, 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டைகுன் ஸ்போர்ட்டிற்கு ரூ.80,000 வரை பலன்கள் கிடைக்கின்றன. டைகுன் ஹைலைன் பிளஸ் 1.0 TSI AT மாடலுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், டைகுன் GT பிளஸ் ஸ்போர்ட் 1.5 TSI DSG மாடலுக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் பலன் கிடைக்கிறது.
விர்டாஸ் மாடல்களில், ஹைலைன் 1.0 TSI AT வேரியண்டிற்கு ரூ.1 லட்சம் வரை பலன்களும், டாப்லைன் 1.0 TSI AT மாடலுக்கு ரூ.1.55 லட்சம் வரை சலுகைகளும் வழங்கப்படுகின்றன. விர்டஸ் GT லைன் 1.0 TSI AT-க்கு ரூ.80,000 வரை பலன்களும், GT பிளஸ் குரோம் மற்றும் GT பிளஸ் ஸ்போர்ட் 1.5 TSI DSG மாடல்களுக்கு ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் நகரம், டீலர்ஷிப், கையிருப்பு மற்றும் நிறத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதால், கார் வாங்கும் முன் உள்ளூர் டீலரிடம் உறுதி செய்து அறிவுறுத்தப்படுகிறது.


