MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.1.59 லட்சத்தில் Yamaha XSR155 வந்தாச்சு.. Hunter 350க்கு ஆப்பு.. இளைஞர்கள் செம குஷி

ரூ.1.59 லட்சத்தில் Yamaha XSR155 வந்தாச்சு.. Hunter 350க்கு ஆப்பு.. இளைஞர்கள் செம குஷி

யமஹா நிறுவனம் தனது எக்ஸ்எஸ்ஆர் 155 பைக்கை புதிய 'மெட்டாலிக் பிளாக்' நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் இந்த மாடல், ராயல் என்பீல்ட் ஹண்டர் 350-க்கு போட்டியாக அமைந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 03 2026, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
புதிய மெட்டாலிக் பிளாக் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 அறிமுகம்
Image Credit : Google

புதிய மெட்டாலிக் பிளாக் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 அறிமுகம்

ராயல் என்பீல்ட் ஹண்டர் 350-க்கு நேரடி போட்டியாக பார்க்கப்படும் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 தற்போது புதிய அப்டேட்டுடன் வந்துள்ளது. இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை முன்னிட்டு எக்ஸ்எஸ்ஆர்155-ஐ புதிய ‘மெட்டாலிக் பிளாக்’ நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ரூ.1,58,990 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) எந்த விலையில் கிடைக்கிறது. பிரீமியம் தோற்றத்துடன் வரும் இந்த மாடல், ரோட்டில் பார்வையை கவரும் வகையில் உள்ளது. புதிய மெட்டாலிக் பிளாக் நிறத்துடன், தங்க நிற அப்சைட் டவுன் முன்புற ஃபோர்க்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் தங்க நிறங்களின் கலவையால் பைக் மேலும் ஸ்டைலிஷ் மற்றும் சக்திவாய்ந்த தோற்றத்தை பெறுகிறது. இதன் ரெட்ரோ ஸ்டைல் ​​வடிவமைப்பு, வலுவான ஃபியூல் டேங்க், எளிய உடல் அமைப்பு போன்ற அம்சங்கள் மாறாமல் தொடர்கின்றன. கிளாசிக் லுக் விரும்பும் ரைடர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், லைட்வெயிட் மற்றும் பேலன்ஸ் ஆன அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது.

22
ரூ.1.6 லட்சத்திற்கு குறைவான ஸ்டைலிஷ் பைக்
Image Credit : Google

ரூ.1.6 லட்சத்திற்கு குறைவான ஸ்டைலிஷ் பைக்

17 அங்குல சக்கரங்கள் ஸ்டேபிள் மற்றும் கம்ஃபர்டபிள் ரைட்டை உறுதி செய்கின்றன. 155சிசி, லிக்விட் கூல்டு, 4-வால்வு என்ஜின் விவிஏ (வேரியபிள் வால்வ் ஆக்சுவேஷன்) தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது 13.5 kW பவர் மற்றும் 14.2 Nm டார்க் வழங்குகிறது, வேகமான ஆக்சிலரேஷனை தருகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த பைக் கவனம் செலுத்துகிறது. யமஹாவின் Deltabox ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மாடலில் அலுமினியம் ஸ்விங் ஆர்ம், USD முன் ஃபோர்க்ஸ், லிங்க்-டைப் மோனோக்ராஸ் ரியர் சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன. 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் (அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்) வழங்கப்பட்டுள்ளதால் கியர் மாற்றம் மென்மையாக இருக்கும்.

டூயல்-சானல் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் பாதுகாப்பை அதிகரிக்கின்றன. அறிமுக நிகழ்வில் பேசிய யமஹா மோட்டார் இந்தியா குழுமத் தலைவர் ஹஜிமே ஆஓட்டா, “நவீன ரெட்ரோ ஸ்போர்ட்ஸ் டிசைனுக்கு இந்தியாவில் நல்லது வரவேற்பு கிடைத்துள்ளது. கருப்பு நிற மாடலுக்கான கோரிக்கையை உடனே நிறைவேற்றியுள்ளோம். எக்ஸ்எஸ்ஆர்155 Metallic Black வெறும் நிற மாற்றமல்ல; தனித்துவம், செயல்திறன் மற்றும் ஸ்டைலை விரும்பும் ரைடர்களுடன் எங்கள் இணைப்பை வலுப்படுத்தும் முயற்சி,” என தெரிவித்தார்.

Related Articles

Related image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Related image2
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யமஹா
யமஹா பைக்
பைக்குகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
வெறும் ரூ.65000ல் 65 கிமீ மைலேஜ்..! பட்ஜெட் பிரியர்களின் முதல் சாய்ஸ் Honda Shine
Recommended image3
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Related Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved