அல்ட்ராவைலட் X-47 கிராஸ்ஓவர் இ-பைக் 24 மணி நேரத்தில் 3,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. உலகின் முதல் ரேடார் மற்றும் கேமரா ஒருங்கிணைந்த பைக் இதுவாகும்.

வெறும் 24 மணி நேரத்திற்குள் அல்ட்ராவைலட் X-47 கிராஸ்ஓவர் இ-பைக் 3,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இதனால், நிறுவனம் அறிமுகச் சலுகையை 1,000 வாடிக்கையாளர்களிடமிருந்து 5,000 ஆக விரிவுபடுத்தியுள்ளது. ரூ.2.49 லட்சம் என்ற அடிப்படை எக்ஸ்-ஷோரூம் விலை முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். இதன் பிறகு விலை ரூ.2.74 லட்சமாக உயரும்.

அல்ட்ராவைலட் நிறுவனம் அதன் நவீன பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெயர் பெற்றது. X-47 கிராஸ்ஓவர் ஸ்டைலான, ஈரோடைனமிக் வடிவமைப்புடன், மிகவும் நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. பெட்ரோல் பைக்குகளை மிஞ்சும் சக்தியையும் இது வழங்குகிறது.

இந்த உலகின் முதல் ரேடார் மற்றும் ஒருங்கிணைந்த கேமரா பைக் ஆகும். 10.3 kWh பேட்டரி மூலம் இயக்கப்படும் இது, 0–60 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 145 கிமீ ஆகும். IDC ரேஞ்ச் 323 கிமீ, மோட்டார் 100 Nm டார்க் வழங்குகிறது. "போர் விமான டிஎன்ஏ" வடிவமைப்பு, சாலையில் சக்திவாய்ந்த மற்றும் எதிர்கால கருப்பொருள் உணர்வைத் தருகிறது.

10-ஆம் தலைமுறை பாஷ் டூயல் சேனல் ஏபிஎஸ், பிரெம்போ பிரேக்குகள், 3-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. SUV போன்ற ஸ்டான்ஸ், ஆல்-டெரெய்ன் டயர்கள், 41 மிமீ ஃப்ரண்ட் ஃபோர்க் மற்றும் மோனோ-ஷாக் பின்புற அமைப்பு மென்மையான சவாரி அனுபவத்தை உறுதி செய்கின்றன. கிளைடு, காம்பாட் மற்றும் பாலிஸ்டிக் என மூன்று ரைடிங் மோடுகள் ரைடருக்கேற்ப அமைக்கலாம்.

X-47 கிராஸ்ஓவரில் 5 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஸ்மார்ட் கண்ட்ரோல், டைப்-சி சார்ஜிங், வயர்லெஸ் இணைப்பு மற்றும் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு ஆகியவை உள்ளன. முன்பதிவு ரூ.999-க்கு திறக்கப்பட்டுள்ளது, டெலிவரிகள் 2025 அக்டோபரில் இந்தியாவிலும், 2026-ல் உலகளாவிய அளவிலும் தொடங்கும்.

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. பெங்களூருவில் தலைமையிடம்கொண்டது, துல்கர் சல்மான் முதலீட்டாளராகவும், 30 இந்திய நகரங்கள் மற்றும் 10 ஐரோப்பிய நாடுகளில் நிறுவனத்தின்படி பரவியுள்ளது. எதிர்காலத்தில் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.