Asianet News TamilAsianet News Tamil

வேற லெவல் அம்சங்கள்... சக்திவாயந்த என்ஜினுடன் அறிமுகமான டொயோட்டா கார்..!

அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்.யு.வி. மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.

toyota urban cruiser hyryder launched features, variants and specs 
Author
India, First Published Jul 2, 2022, 5:54 PM IST

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய எஸ்.யு.வி. மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

இதையும் படியுங்கள்: விற்பனையில் மாஸ் காட்டிய ஏத்தர் எனர்ஜி... ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்களா?

இந்திய சந்தையில் அதிக போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் அறிமுகமாகி இருக்கிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ளும் வகையில், டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் தனித்துவம் மிக்க அம்சங்களை வழங்கி இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: எல்.சி.டி. கன்சோல் கொண்ட டி.வி.எஸ். ரேடியான் - ரூ. 59 ஆயிரம் விலையில் அறிமுகம்..!

ரக்கட் எஸ்.யு.வி.:

டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் டிசைன் மிகவும் வித்தியாசமாக காட்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதன் முன்புறம் ஸ்ப்லிட் ரக லைட்டிங் டிசைன், டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் முன்புற பம்ப்பரில் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பரில் பெரிய செண்ட்ரல் ஏர் இன்டேக் உள்ளது. பக்கவாட்டுகளில் பிளாக்டு-அவுட் ரியர் வியூ மிரர்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதையும் படியுங்கள்: மலிவு விலையில் புது எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் எம்ஜி மோட்டார் - வெளியான ஸ்பை படங்கள்..!

இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள் உள்ளன. இத்துடன் பிளாக் கிலாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது எஸ்.யு.வி. மாடலுக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ரூஃப் உள்ளது. இதுவும் காரின் தோற்றத்தை ஒட்டுமொத்தத்தில் மேம்படுத்துகிறது. இத்துடன் கூர்மையான விண்ட் ஸ்கிரீன், தனித்துவம் மிக்க எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டெயில் கேட்-இல் சி வடிவ எலிமண்ட்கள் உள்ளன. 

toyota urban cruiser hyryder launched features, variants and specs 

சிறப்பம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்.யு.வி. மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், பெரிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் யூனிட், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஏர் பியூரிபையர், வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பிற்கு 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, 6 ஏர்பேக், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் நியோ டிரைவ் செட்டப் மாடல் E, S, G, மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஹைப்ரிட் வேரியண்ட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

என்ஜின் விவரங்கள்:

இந்தியாவில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஏழு சிங்கில் டோன் மற்றும் நான்கு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் யூனிட் ஆகும். இது 100.5 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஆப்ஷன் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷனில் அட்கின்சன் சைக்கிள் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி யூனிட் உள்ளது.

இந்த என்ஜின் 87 ஹெச்.பி. பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்.பி. பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVTகியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios