Asianet News TamilAsianet News Tamil

லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் கார் ஆன டாடா டியாகோ இவியின் முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

Tata Tiago ev review
Author
First Published Dec 21, 2022, 3:31 PM IST

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தங்கள் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அண்மைய காலமாக மின்சார வாகன உற்பத்தியில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

நெக்ஸான் EV மற்றும் டிகோர் EV கார்களை தொடர்ந்து டியாகோ மின்சார கார் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்து வரும் வாகன எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக மின்சார வாகன பயன்பாட்டை நோக்கிய கவனம் அதிகரித்து வருகிறது.

Tata Tiago ev review

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

டாடா மோட்டார்ஸ் சென்று டியாகோ EVயின் விலையை ரூ.8.5 லட்சமாக நிர்ணயித்துள்ளது. மேலும் இதன் விலைகள் விரைவில் அதிகமாகலாம். டியாகோ EV வழக்கமான டியாகோ போலவே தெரிகிறது. ஆனால் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 200 கி.மீ தூரத்துக்கு நகரப் பயணங்களுக்கும், நகர்ப்புற மக்களுக்கும் போதுமான வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகரத்துக்குள்ளே செல்ல சிறப்பான கார் வேண்டும் என்றால், உங்களின் முதல் சாய்ஸ் இதுவாக இருக்கலாம். ஸ்மூத் டிரைவ், கியர்கள் இல்லாதது, லைட் கன்ட்ரோல்கள் போன்றவை மற்ற கார்களில் இருந்து தனித்துவமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 8-ஸ்பீக்கர் ஹர்மன் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் & வைப்பர்கள், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் பல போன்ற அம்சங்கள் சிறப்பாக உள்ளது.

Tata Tiago ev review

45 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த செக்மெண்டிலேயே முதன் முறையாக டெலிமேட்டிக்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்களை எளிதாக இணைத்தும் கொள்ளலாம். மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் சொந்தமாக நிறுவ வேண்டும்.  பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளை போல பல இடங்களில் இந்த சார்ஜ் பாயிண்ட்கள் இல்லாமல் இருப்பது நெகட்டிவ் ஆகும்.

200 கி.மீ தூரம் வரை பயணிக்க சிறந்த காராக இருந்தாலும், இது லாங் ட்ரைவுக்கு ஒத்துவராது என்பதே உண்மை. மணிக்கு 100 கி.மீ வேகத்திற்குப் பிறகு மின்சாரம் குறைகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீட்டராக இருக்கிறது. முதன் முறையாக எலெக்ட்ரிக் காரை வாங்குபவர்களுக்கு டியாகோ எலக்ட்ரிக் கார் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

Follow Us:
Download App:
  • android
  • ios